Podcasts by Category

தமிழ் சிறுகதைகள் , Tamil Short stories

தமிழ் சிறுகதைகள் , Tamil Short stories

rams

Do you want to listen to good Tamil short stories? Try my podcasts!! I wish to promote tamil stories and to motivate reading. . .Please do suggest good stories that can be recorded here. . . As comments dont seem to be enabled in india, please email me ur feedback to rams.villageres@gmail.com படிக்க இப்போது பலருக்கு நேரமில்லை. அப்படியே படித்தாலும், வார மாத இதழ்களில் வரும் தரமற்ற வணிக எழுத்துகளையே படிக்க வேண்டிய நிலை. முன்னோடி எழுத்தாளர்களின் நல்ல தரமான சிறுகதைகளை ஒலி வடிவில் பதிவு செய்து தருகிறேன். கேட்டு மகிழுங்கள், தேடிப் படியுங்கள்!! Update:

201 - 198. கட்டியவளைக் கொண்டாடுகிறவர்கள் - ம.காமுத்துரை
0:00 / 0:00
1x
  • 201 - 198. கட்டியவளைக் கொண்டாடுகிறவர்கள் - ம.காமுத்துரை

    ஒவ்வொரு கதைப்பாத்திரத்தையும் நுணுக்கமாக படைத்திருக்கிறார். ஒவ்வொருவருமே ஒரு அந்நியோன்யமான உறவுடன் உலவுகிறார்கள். அருமையான கதை. . . 

    விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை அவர்களின் இயல்பான மொழியில் பதிவு செய்தவர் காமுத்துரை. "ம. காமுத்துரையின் எழுத்துச் சிறப்பு, ஆடம்பரங்களற்ற மக்கள் மொழி. வாசிக்கத் தூண்டும் ஈர்ப்புள்ள நடை" என்று நாஞ்சில்நாடன் குறிப்பிடுகிறார். "எந்தப் பேனாவுக்கும் கொஞ்சமும் உயரம் குறையாத எழுத்தைக் கைவசம் கொண்டவர் காமுத்துரை" என்கிறார், பா.செயப்பிரகாசம்

    Sun, 26 Jul 2026 - 29min
  • 200 - 197. கைலாசபுரம் - சாம்ராஜ்

    இடதுசாரி இயக்க மனிதர்களின் போராட்டங்கள் தோற்பதை கோஷங்கள் வெற்றுக் கூச்சல்களாக அலட்சியப்படுத்தப்படுவதை நம்பிக்கைகள் கலைந்து போவதை காதல்கள் மரித்துப் போவதைப் பேசும் சாம்ராஜின் கதைகள், தோழர்கள் தங்களைச் சுற்றி இருக்கும் எளிய மனிதர்களோடு நெருக்கமாவதைக் காட்டுவதன் வழியாக அதிகாரத்தின் முன் பலமிழந்தாலும் மக்களது நம்பிக்கையைப் பெறுவதில் அவர்கள் தோற்கவில்லை என்பதை மறைமுகமாகச் சொல்கின்றன. ---- ஜெயமோகன் 

    அநியாயத்தை எதிர்த்து குரல் கொடுத்து, தண்டனையும் கொடுத்து குற்றவாளியை மருத்துவமனையில் சேர்த்து குணமும்படுத்தி, கத்தியை வைத்து மிரட்டி வாழும் அவனுக்கு அந்தக் கத்தியை வைத்தே பழம் நறுக்கி கொடுக்கும், தோழர்கள் நெஞ்சை தொடுகிறார்கள்.

    Mon, 08 Jun 2026 - 25min
  • 199 - 196. படுகை - ஜி. கார்ல் மார்க்ஸ்

    ஜி.கார்ல் மார்க்ஸ் பகடி, நுண்சித்தரிப்புகள் ஆகியவற்றுடன்கூடிய நடை கொண்டவர்.


    ஜி.கார்ல் மார்க்ஸ் எழுதிய படுகை கதை ஒரு குற்றவாளியை தேடிச் செல்லும் போலீஸ்காரர்களைப் பற்றியது. இக்கதையில் வறண்ட ஆற்றுக்குள் அவனைப் பிடிக்க அவர்கள் வைக்கும் பொறி, பிடித்தேயாக வேண்டிய கட்டாயத்தின் காரணிகள், திடீரென வெளிப்படும் பெண் கதாபாத்திரத்தால் அவர்களது திட்டம் சீர்குலைவது என நீடிக்கும் கதை நம்மையும் அவர்களைப் போன்று ஒரு புதருக்குள் பதுங்கி குற்றவாளிக்காக காத்திருக்கச் செய்கிறது.

    Fri, 29 May 2026 - 24min
  • 198 - 195. துண்டு - கந்தர்வன்

    வறியவர்களின் வாழ்வில் அதிகார வர்க்கம் செலுத்தும் அரசியலைச் சொல்லும் கந்தர்வனின் சிறுகதை . முடிவு ஒரு அசத்தல்.
    மார்க்ஸியக் கோட்பாட்டின் மேல் இருந்த உறுதியான நம்பிக்கையால் போராளியாகவே வாழ்ந்தும், உழைக்கும் மக்களின் துன்பங்களைப் பிரச்சார நோக்கில் எழுதப்பட்ட கதைகளாக இல்லாமல் கந்தர்வனின் கதைகள் அன்றாடத்தில் நிகழும் அசாதாரணங்களின் கதைகளாகத் திகழ்ந்தன.

    Thu, 21 May 2026 - 13min
  • 197 - 194. கருட வித்தை - என்.ஸ்ரீராம் 

    கொங்கு மண்ணின் மணம் வீசும் கதைகள் ஸ்ரீராமின் கதைகள். வட்டார மொழியும், சொலவடைகளும் தாராபுர வட்டாரத்தை கண் முன்னே நிறுத்துகின்றன.

    இந்த கதையின் ஆழம் கிணற்று வெட்டிகளையும் பிரமிப்பு அடைய வைக்கும்!

    Fri, 15 May 2026 - 29min
Show More Episodes