Nach Genre filtern
Do you want to listen to good Tamil short stories? Try my podcasts!! I wish to promote tamil stories and to motivate reading. . .Please do suggest good stories that can be recorded here. . . As comments dont seem to be enabled in india, please email me ur feedback to rams.villageres@gmail.com படிக்க இப்போது பலருக்கு நேரமில்லை. அப்படியே படித்தாலும், வார மாத இதழ்களில் வரும் தரமற்ற வணிக எழுத்துகளையே படிக்க வேண்டிய நிலை. முன்னோடி எழுத்தாளர்களின் நல்ல தரமான சிறுகதைகளை ஒலி வடிவில் பதிவு செய்து தருகிறேன். கேட்டு மகிழுங்கள், தேடிப் படியுங்கள்!! Update:
- 201 - 198. கட்டியவளைக் கொண்டாடுகிறவர்கள் - ம.காமுத்துரை
ஒவ்வொரு கதைப்பாத்திரத்தையும் நுணுக்கமாக படைத்திருக்கிறார். ஒவ்வொருவருமே ஒரு அந்நியோன்யமான உறவுடன் உலவுகிறார்கள். அருமையான கதை. . .
விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை அவர்களின் இயல்பான மொழியில் பதிவு செய்தவர் காமுத்துரை. "ம. காமுத்துரையின் எழுத்துச் சிறப்பு, ஆடம்பரங்களற்ற மக்கள் மொழி. வாசிக்கத் தூண்டும் ஈர்ப்புள்ள நடை" என்று நாஞ்சில்நாடன் குறிப்பிடுகிறார். "எந்தப் பேனாவுக்கும் கொஞ்சமும் உயரம் குறையாத எழுத்தைக் கைவசம் கொண்டவர் காமுத்துரை" என்கிறார், பா.செயப்பிரகாசம்
Sun, 26 Jul 2026 - 29min - 200 - 197. கைலாசபுரம் - சாம்ராஜ்
இடதுசாரி இயக்க மனிதர்களின் போராட்டங்கள் தோற்பதை கோஷங்கள் வெற்றுக் கூச்சல்களாக அலட்சியப்படுத்தப்படுவதை நம்பிக்கைகள் கலைந்து போவதை காதல்கள் மரித்துப் போவதைப் பேசும் சாம்ராஜின் கதைகள், தோழர்கள் தங்களைச் சுற்றி இருக்கும் எளிய மனிதர்களோடு நெருக்கமாவதைக் காட்டுவதன் வழியாக அதிகாரத்தின் முன் பலமிழந்தாலும் மக்களது நம்பிக்கையைப் பெறுவதில் அவர்கள் தோற்கவில்லை என்பதை மறைமுகமாகச் சொல்கின்றன. ---- ஜெயமோகன்
அநியாயத்தை எதிர்த்து குரல் கொடுத்து, தண்டனையும் கொடுத்து குற்றவாளியை மருத்துவமனையில் சேர்த்து குணமும்படுத்தி, கத்தியை வைத்து மிரட்டி வாழும் அவனுக்கு அந்தக் கத்தியை வைத்தே பழம் நறுக்கி கொடுக்கும், தோழர்கள் நெஞ்சை தொடுகிறார்கள்.
Mon, 08 Jun 2026 - 25min - 199 - 196. படுகை - ஜி. கார்ல் மார்க்ஸ்
ஜி.கார்ல் மார்க்ஸ் பகடி, நுண்சித்தரிப்புகள் ஆகியவற்றுடன்கூடிய நடை கொண்டவர்.
ஜி.கார்ல் மார்க்ஸ் எழுதிய படுகை கதை ஒரு குற்றவாளியை தேடிச் செல்லும் போலீஸ்காரர்களைப் பற்றியது. இக்கதையில் வறண்ட ஆற்றுக்குள் அவனைப் பிடிக்க அவர்கள் வைக்கும் பொறி, பிடித்தேயாக வேண்டிய கட்டாயத்தின் காரணிகள், திடீரென வெளிப்படும் பெண் கதாபாத்திரத்தால் அவர்களது திட்டம் சீர்குலைவது என நீடிக்கும் கதை நம்மையும் அவர்களைப் போன்று ஒரு புதருக்குள் பதுங்கி குற்றவாளிக்காக காத்திருக்கச் செய்கிறது.
Fri, 29 May 2026 - 24min - 198 - 195. துண்டு - கந்தர்வன்
வறியவர்களின் வாழ்வில் அதிகார வர்க்கம் செலுத்தும் அரசியலைச் சொல்லும் கந்தர்வனின் சிறுகதை . முடிவு ஒரு அசத்தல்.
மார்க்ஸியக் கோட்பாட்டின் மேல் இருந்த உறுதியான நம்பிக்கையால் போராளியாகவே வாழ்ந்தும், உழைக்கும் மக்களின் துன்பங்களைப் பிரச்சார நோக்கில் எழுதப்பட்ட கதைகளாக இல்லாமல் கந்தர்வனின் கதைகள் அன்றாடத்தில் நிகழும் அசாதாரணங்களின் கதைகளாகத் திகழ்ந்தன.Thu, 21 May 2026 - 13min - 197 - 194. கருட வித்தை - என்.ஸ்ரீராம்Fri, 15 May 2026 - 29min
- 196 - 193. கொலைபாதகன் - க.நா.சு
"கவிதை, சிறுகதை, நாவல் என்று எழுதுகிறபோது நான் எழுதியதை எந்தச் சுண்டைக்காய் வாசகன் ஏற்றுக்கொள்ளுவான் என்பது பற்றி எனக்கு நினைப்பு இருப்பதில்லை. நான் இன்று கவிதை என்று எழுதுவதை, கம்பனும் இளங்கோவும் டாண்டேயும் ஷேக்ஸ்பியரும் இன்று இருந்தால் ஏற்றுக் கொள்வார்களா என்பதுதான் என் நினைப்பு. நிகழ்கால வாசகன் அறிவால், ஆற்றலால், அரசியலால் அவர்களை விடச் சிறந்தவனாக இருக்கலாம் – ஆனால் இலக்கியத் தரத்தால் எந்த வாசகனும் எந்தக் காலத்திலும் எட்டாத ஒரு தரத்தையே பழங்கால, நிகழ்கால, வருங்கால எழுத்தாளர்கள் எல்லாம் எட்ட முயலுகின்றனர். அந்தத் தரம் ஒரு சரடு – அதைக் கண்டுகொள்ளத்தான் நம் பொது ஸீரியஸ் எழுத்தாளனும், தரமுள்ள இலக்கியாசிரியனும் முயலுகிறான். அந்தத் தரத்தை வாசகர்கள் தேடிக் கண்டுகொள்ள வேண்டும்.
இன்றைய வாசகர்கள் தேடத் தயாராக இல்லை. ஆனால் அவர்கள் தேடுவது அவர்களுக்குக் கிடைக்கும்." --- க.நா.சு
Thu, 23 Apr 2026 - 20min - 195 - 192. டை அணிந்தவன் கணேசன் இல்லை - அ. பாண்டியன்
சிறுவயதில் நம்மை விட திறமை வாய்ந்தவர்களை, தனித்தன்மை கொண்டவர்களை பெரும்பாலும் நாம் வெறுக்கவே செய்திருக்கிறோம் - அவர்கள் எல்லோர் பாராட்டையும் பெறுவது நமக்கு வயிற்றெரிச்சலை தந்திருக்கிறது. அப்படி இருந்த ஒரு நண்பன் இப்போது கொள்கைகளை துறந்து சாதாரணமாய் இருக்கிறான் என்பதையும் ஒத்துக்கொள்ள முடியவில்லை. அவனது இழப்பை நம்மால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அற்புதமான கதை. அ. பாண்டியனின் அருமையான படைப்பு.
Sun, 12 Apr 2026 - 17min - 194 - 191. சத்ரு - பவா செல்லதுரைSun, 05 Apr 2026 - 16min
- 193 - 190. சிறுமி கொண்டுவந்த மலர் - விமலாதித்த மாமல்லன்Mon, 30 Mar 2026 - 19min
- 192 - 189. கல்வி - அசோகமித்திரன்
47 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கதை. கல்வி என்பது எப்படி மனித நேயமற்று, குழந்தைத்தனத்தை கொடூரமாக சிதைக்கும் படியாக இருந்தது என்பதை தனக்கே உரிய சரள நடையில் அசோகமித்திரன் சொல்லும்போது மனது வலிக்கிறது. இப்போது எப்படி இருக்கிறது நமது ஆரம்ப கல்விச் சாலைகள்?
நான் பதிந்திருக்கும் மற்ற அசோகமித்திரனின் கதைகள்:
158. தனியொருவனுக்கு - அசோகமித்திரன்
152. முனீரின் ஸ்பானர்கள் - அசோகமித்திரன்
138. காலமும் ஐந்து குழந்தைகளும் - அசோகமித்திரன்
47. அப்பாவின் சினேகிதர் - அசோகமித்திரன்
34. புலிக்கலைஞன் - அசோகமித்திரன்
24. விடிவதற்கு முன் - அசோகமித்திரன்
Fri, 20 Mar 2026 - 18min - 191 - 188. கோடித்துணி - பெருமாள் முருகன்
"கொங்கு மக்களின் வாழ்வையும், வாழ்வியல் உள்மடிப்புகளையும் , வட்டார வழக்கையும் எழுத்தாக்கியவர் பெருமாள் முருகன். ஏறுவெயில்,நிழல் முற்றம் கூளமாதாரி மூன்று நாவல்களும் பதின்ம வயது சிறுவர்களின் உலகத்தை மையமாகக் கொண்ட படைப்புகள். விளிம்பு நிலை வாழ்வின் நேர்த்தியான சித்தரிப்பு அவரது புனைவுலகத்தின் சிறப்பம்சம்." https://tamil.wiki/wiki/பெருமாள்_முருகன்
"எழுதுவது மனதிருப்தியை தருகிறது. மனதில் உள்ளதை இடம், காலம் கடந்து பலரோடு பகிர்ந்துகொள்வதற்கும், மனதில் உள்ள அழுத்தம், வேதனையிலிருந்து விடுதலை பெறுவதற்குமே எழுதுகிறேன்." என்கிறார் பெருமாள் முருகன்.
நான் பதிந்திருக்கும் பெருமாள் முருகனின் மற்ற கதைகள்:
173. நீர் விளையாட்டு – பெருமாள் முருகன்
Sat, 07 Mar 2026 - 19min - 190 - 187. சிலுவைப்பாதை - கமல தேவி
உலகத்தில் எல்லோருக்கும் தேவைப்படுவது, எல்லோராலும் கொடுக்கக்கூடியது, கொடுத்தாலும் குறையாதது எது? அது இந்த கதை முழுக்க ஒவ்வொரு கதாபாத்திரத்தாலும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. வெறுப்பை வளர்க்கும் இந்த காலகட்டத்தில் இந்த கதை ஒரு மருந்து.
நான் பதிந்திருக்கும் கமலதேவியின் மற்ற கதைகள்:
165.கண்ணாடிப் பரப்பு - கமலதேவி
Sat, 28 Feb 2026 - 21min - 189 - 186. வாசனை - பிரபஞ்சன்
186. வாசனை - பிரபஞ்சன்
கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கதை. சிற்சில விஷயங்களில் சிறிது முன்னேற்றம் இருந்தாலும், தனியாக வாழும் பெண்களைப் பற்றிய எண்ணப்போக்கு பெரிதாய் மாறவில்லை என்று தான் தோன்றுகிறது. படிக்கும் வாசகர்க்கும் கூட ஒரு பரிட்சை வைத்திருக்கிறார் பிரபஞ்சன். எங்கே என்று சொல்லுங்கள்! அனுப்ப வேண்டிய இமெயில் rams.villageres@gmail.com
நான் பதிந்திருக்கும் பிரபஞ்சனின் மற்ற கதைகள்:
81. மரி என்னும் ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்
Sun, 22 Feb 2026 - 32min - 188 - 185. தபால்கார அப்துல்காதர் - எம்.எஸ்.கல்யாணசுந்தரம்
எம்.எஸ். கல்யாணசுந்தரம் (மார்ச் 28, 1901 -1989) தமிழில் நாவல்களும் சிறுகதைகளும் எழுதிய எழுத்தாளர். தமிழ் இலக்கியத்தில் வழக்கமாகப் பேசப்படாத களங்களை கதைகளில் எழுதியவர் என்பதனால் முக்கியமானவர் என்று கருதப்படுகிறார். மிகையில்லாத யதார்த்தவாதத்தை எழுதியவர்.
இந்த கதை படிப்பவர் அனைவரையும் புன்முறுவல் பூக்கச் செய்யும்.
Fri, 06 Feb 2026 - 14min - 187 - 184. புன்னகை - கு.அழகிரிசாமி.
நடுத்தர வர்கத்தின் தேவையற்ற டாம்பீகத்தையும் பணம்படைத்தவர்களின் அற்பத்தனத்தையும் புன்னகை மூலமாக வெளிக்கொணர்கிறார் அழகிரிசாமி.
உங்கள் பின்னூட்டத்தை rams.villageres@gmail.comக்கு அனுப்புங்கள். நன்றி .
நான் பதிந்திருக்கும் கு.அழகிரிசாமியின் மற்ற கதைகள்:
120. தரிசனம் - கு.அழகிரிசாமி
60. சிங்கப்பூர் சென்ற மகன் - கு. அழகிரிசாமி
46. இருவர் கண்ட ஒரே கனவு - கு. அழகிரிசாமி
32. ராஜா வந்திருக்கிறார் - கு.அழகிரிசாமி
22. அன்பளிப்பு - கு.அழகிரிசாமி
Thu, 22 Jan 2026 - 25min - 186 - 183. பாதைகள்- ஜெயமோகன்
தேவதைக் கதைகளும் பேய்க்கதைகளும் என்ற தொகுப்பில் இருந்து.
உங்கள் பின்னூட்டம் மற்றும் ஆதரவு தொகை அனுப்ப rams.villageres@gmail.comக்கு ஈமெயில் அனுப்புங்கள். நன்றி.
நான் பதிந்திருக்கும் ஜெயமோகனின் மற்றைய கதைகள்
27 - 2 . யானை டாக்டர் - இறுதி பகுதி
27 - 1 . யானை டாக்டர் - முதல் பகுதி
Sun, 18 Jan 2026 - 26min - 185 - 182. பூனைக் கண்ணன் கடத்திய அம்மன் - நாஞ்சில் நாடன்
வருடத்தின் முதல் கதை.
நாஞ்சில் நாடனின் ஒரு யதார்த்தமான கடத்தல் கதை ஆன்மீக கதையாக பரிணாம வளர்ச்சி கொள்கிறது. பொங்கிப் பிரகவிக்கும் காட்டாறாய் அவரது மொழி நம்மை அடித்து சென்று கரை சேர்க்கிறது.
நான் பதிந்திருக்கும் நாஞ்சில் நாடனின் மற்ற கதைகள்.
179. அம்பாரி மீது ஒரு ஆடு - நாஞ்சில் நாடன்
175. ஆசையெனும் நாய்கள் - நாஞ்சில் நாடன்
156. பேய்க்கொட்டு - நாஞ்சில் நாடன்
112. வளைகள் எலிகளுக்கானவை - நாஞ்சில் நாடன்
61. ஒரு இந்நாட்டு மன்னர் - நாஞ்சில் நாடன்
95. சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன்
85. வந்தான் வருவான் வாராநின்றான் - நாஞ்சில் நாடன்
Sun, 11 Jan 2026 - 26min - 184 - 181. இணைப்பறவை - ஆர்.சூடாமணி
ஆர். சூடாமணி (R. Chudamani, 10 சனவரி 1931 – 13 செப்டம்பர் 2010) தமிழக எழுத்தாளர். உளவியல் எழுத்தாளர் எனப் புகழப்பட்ட இவர், ஏராளமான சிறுகதைகளையும், புதினங்களையும் எழுதியிருக்கிறார். கலைமகள், சுதேசமித்திரன், தினமணிக் கதிர், கல்கி, ஆனந்த விகடன் என்று எல்லாப் பத்திரிகைகளிலும் சூடாமணி எழுதியிருக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல் சூடாமணி ராகவன் என்ற பெயரில் பல ஆங்கில ஆக்கங்களையும் எழுதியவர்.
கேட்டு மகிழுங்கள் . பின்னூட்டம் அனுப்புங்கள் rams.villageres@gmail.com க்கு . உங்கள் ஊக்க மொழியே எனக்கு ஊதியம்.
நான் பதிந்திருக்கும் இவரது மற்ற கதைகள்:
10. அந்நியர்கள் - ஆர். சூடாமணி
Fri, 05 Dec 2025 - 24min - 183 - 180. கிடாரி - சுந்தர ராமசாமி
அறுபது வருடம் முன் எழுதப்பட்ட கதை. இன்றும் இந்த நிலை தான் பெரும்பாலும்.
ஒரு வீட்டில் இரண்டு பிரசவங்கள். ஒரே எதிர்பார்ப்பு. ஒன்றில் பலிக்கிறது - தேவையில்லாத இடத்தில். மற்றொன்றில் - தேவையான இடத்தில் பொய்த்துப் போகிறது. சு.ரா தன் எழுத்துக்களால் நம்மை கட்டி இழுத்துக் கொண்டு போகிறார்.
உங்கள் பின்னூட்டத்தை rams.villageres@gmail.com க்கு அனுப்புங்கள்!
நான் பதிந்திருக்கும் சு.ரா வின் பிற கதைகள்:
114. ஸ்டாம்பு ஆல்பம் - சுந்தர ராமசாமி
70. ரத்னாபாயின் ஆங்கிலம் - சுந்தர ராமசாமி
Sat, 29 Nov 2025 - 46min - 182 - 179. அம்பாரி மீது ஒரு ஆடு - நாஞ்சில் நாடன்
மேல்தட்டு கீழ்தட்டு மக்களின் பழகிப்போன பாழாகிப் போன மனநிலையை வேடிக்கையாக சொல்கிறார் நாஞ்சில் நாடன்.
நான் படிந்திருக்கும் மற்ற நாஞ்சில் நாடன் கதைகள் :
175. ஆசையெனும் நாய்கள் - நாஞ்சில் நாடன்
156. பேய்க்கொட்டு - நாஞ்சில் நாடன்
112. வளைகள் எலிகளுக்கானவை - நாஞ்சில் நாடன்
61. ஒரு இந்நாட்டு மன்னர் - நாஞ்சில் நாடன்
95. சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன்
85. வந்தான் வருவான் வாராநின்றான் - நாஞ்சில் நாடன்
Thu, 13 Nov 2025 - 14min - 181 - 178. காட்டில் ஒரு மான் - அம்பை
அம்பை என்ற புனைபெயரில் எழுதும் சி. எஸ். லக்ஷ்மி அறுபதுகளின் பிற்பகுதியிலிருந்து தீவிரமாக இயங்கிவரும் படைப்பாளி. பேச்சும் மௌனமும் ஒன்றையொன்று கடந்து சென்றுகொண்டிருக்கும் அம்பையின் கதைமொழி ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய தொனிகளை அடைந்து வந்திருக்கிறது. அம்பையின் சிறுகதைகள் தமிழில் பெண் நிலை நோக்கின் முதல் கலாபூர்வமான வெளிப்பாடுகளாகக் கருதப்படுகின்றன.
இந்தக் கதை அதிகம் பேசப்படாத ஒரு குறைபாட்டை, பல பெண்கள் அனுபவித்து வரும் கொடுமையை மிக மென்மையாக முன் வைக்கிறது.
கமெண்ட் பகுதியில் வாசகர்கள் கொடுக்கும் பதிவுகளை spotify எனக்கு காட்ட மறுக்கிறது ( not enabled in India!). எனவே தயவு செய்து உங்கள் பின்னூட்டதை rams.villageres@gmail.comக்கு அனுப்புங்கள். நன்றி!
Thu, 06 Nov 2025 - 17min - 180 - 177. அதிர்ஷ்டம் என்பது ஒருவித திறமை - அ முத்துலிங்கம்Sun, 23 Mar 2025 - 18min
- 179 - 176. உபதேசம் - புதுமைப்பித்தன்
இந்தக் கதை முழுக்க நிகழ்வுகளால் உள்ளது, நிகழ்வுகளின் அர்த்தத்தை வாசகனே அறிந்து கொள்ளட்டும் என்னும் முயற்சி. இந்த முறையின் பலம், பலவீனம் இரண்டுமே அர்த்தத்தை வாசகனே உருவாக்கிக் கொள்ளவேண்டும் என்ற கட்டாயமே; ஒவ்வொரு வாசகனும் இதனை ஒவ்வொரு அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளவியலும்.
உங்கள் feedbackஐ rams.villageres@gmail.com க்கு அனுப்பவும். நன்றி!
Sun, 09 Feb 2025 - 11min - 178 - 175. ஆசையெனும் நாய்கள் - நாஞ்சில் நாடன்
நாஞ்சில் நாடன் படைப்புகள் அனைத்துமே அவர் காட்டும் பிரதேசத்தின் மொழியினாலும் உயிர்த் துடிப்பினாலும் விம்மிக் கொண்டிருப்பவை. - க.நா.சு
Sun, 26 Jan 2025 - 12min - 177 - 174. சுந்தர் - அசோகமித்திரன்Sun, 19 Jan 2025 - 23min
- 176 - 173. நீர் விளையாட்டு – பெருமாள் முருகன்
வெகு நாட்களாக படிக்க திட்டமிட்டு நான் சமீபத்தில் படிக்க தொடங்கியிருக்கும் எழுத்தாளர் பெருமாள் முருகன். அவர் எழுத்தில் நான் படித்த முதல் கதை கழிமுகம். மிகவும் வேறுபட்ட நடையில் அதிர வைத்த படைப்பு. பிறகு அவரது சிறுகதைகளை தேட ஆரம்பித்தேன். இந்த முத்து கிடைத்தது. கிணறும் நீச்சலும் கிராமங்களிலும் மறையத் தொடங்கியிருக்கும் இந்தக் காலத்தில் ஒரு ஆவணப்படம் போல இந்தக் கதை. . .
Sun, 24 Dec 2023 - 20min - 175 - 172. அனாகத நாதம் - செந்தில் ஜெகன்நாதன்
பரம்பரைக் கலை கைவரவில்லையே என்று சாமிநாதனோடு நம்மையும் தவிக்க விடுகிறார் செந்தில் ஜெகன்நாதன். நாதஸ்வரத்திற்கு இணையாக பொங்கிப் பிரவாகித்து வரும் எழுத்துநடை. மென் உணர்ச்சிகளை பொருத்தமான ராகங்களோடு எடுத்தாண்டிருக்கிறார். சாமிநாதனுக்கு மட்டுமல்ல நமக்கும் கூட முடிவில் நீர் தளும்பி கண்ணெரிச்சல் வந்துவிடுகிறது.
Wed, 04 Oct 2023 - 38min - 174 - 171. தியாகம் - கு.அழகிரிசாமி
சொல்லால் சுட்டுப் பொசுக்கும் மனிதனிடம் இத்தனை பெருங்கருணையா? மனதை இளக வைக்கிறார் கு.அழகிரிசாமி
120. தரிசனம் - கு.அழகிரிசாமி
60. சிங்கப்பூர் சென்ற மகன் - கு. அழகிரிசாமி
46. இருவர் கண்ட ஒரே கனவு - கு. அழகிரிசாமி
32. ராஜா வந்திருக்கிறார் - கு.அழகிரிசாமி
22. அன்பளிப்பு - கு.அழகிரிசாமி
Tue, 19 Sep 2023 - 20min - 173 - 170. காணிக்கை - ந.பிச்சமூர்த்தி
மிக எளிமையான ஆனால் ஆழமான கதைக் களம். . .50 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கதை இன்றளவும் பொருந்துகிறது. ஆண் பெண் உறவு அப்படியே தேங்கித் தான் இருக்கிறது. . .
நான் பதிந்திருக்கும் ந.பிச்சமூர்த்தியின் மற்ற கதைகள்:
106. வெறும் செருப்பு - ந.பிச்சமூர்த்தி
128. மாயமான் - ந.பிச்சமூர்த்தி
153. வேப்பமரம் - ந.பிச்சமூர்த்தி
Spotify users can add their comments/feedback directly . Other podcast users please email your feedback to rams.villageres@gmail.com. Thank you.
Fri, 24 Mar 2023 - 14min - 172 - 169. மனைவியின் நண்பர் - வண்ணநிலவன்
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நெருக்கமான நட்பு நமது கலாசாரத்தில் சாத்தியம் தானா என்பது பற்றிய கதை. கதை நெடுக வண்ணநிலவன் தடுமாறுகிறார் - எந்தப் பக்கம் சேர்வது என்று தெரியாமல். . .பாவம் சிவகாமி மூன்று ஆண்களிடமும் மாட்டிக் கொண்டு திணறுகிறாள்!
நான் பதிந்திருக்கும் வண்ணநிலவனின் மற்ற கதைகள்
149.பாம்பும் பிடாரனும் - வண்ணநிலவன்
Fri, 10 Feb 2023 - 25min - 171 - 168. குருபீடம் - ஜெயகாந்தன்
50 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கதை. இன்றும் இந்த நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன - ஆன்மீகத்தில் மட்டுமல்ல எல்லா துறைகளிலும். . .ஜெயகாந்தனின் எள்ளல் கதை முழுக்க கொப்பளிக்கிறது. . .
நான் பதிந்திருக்கும் ஜெயகாந்தனின் மற்ற கதைகள்
146. பாவம், பக்தர் தானே - ஜெயகாந்தன்
137. அக்கினிப்பிரவேசம் - ஜெயகாந்தன்
20. இருளில் ஒரு துணை - ஜெயகாந்தன்
18. அக்ரஹாரத்துப் பூனை - ஜெயகாந்தன்
17. லட்சாதிபதிகள் - ஜெயகாந்தன்
Sun, 15 Jan 2023 - 23min - 170 - 167. அன்னங்களும் பட்சிகளும் - அம்பை
நாம் அனைவருமே ஒரு நாள் நினைவுகளாக மட்டுமே எஞ்சியிருப்போம். பச்சிளம் குழந்தைக்கு கூட நினைவுகள் - தாயின் மொழி , புடவை. . .புலம்பெயர்ந்த குடும்பங்கள் மங்கலாகிப் போகும் நினைவுகளை தக்க வைத்துக்கொள்ள செய்யும் முயற்சிகள் அர்த்தமற்றவையாகின்றன அடுத்த தலைமுறைக்கு. . . நினைவுகளின் தொகுப்பாய் இந்தக் கதை. . .
அம்பை தமிழில் சிறுகதைகளும், ஆய்வுக்கட்டுரைகளும் எழுதும் எழுத்தாளர். தமிழில் பெண்ணியம் சார்ந்து எழுதிய முதன்மைப் படைப்பாளி என விமர்சகர்களால் கருதப்படுபவர். பெண்ணியக் களச்செயல்பாட்டாளர். சமூகவியல் ஆய்வாளர். ஆங்கிலத்தில் C.S.Laksmi என்னும் இயற்பெயரில் ஆய்வுக்கட்டுரைகளை எழுதியவர்.
நான் பதிந்திருக்கும் அம்பையின் மற்ற கதைகள்.
118. அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை
Sun, 08 Jan 2023 - 14min - 169 - 166. நூறு நாற்காலிகள் - ஜெயமோகன்
சாதீய கொடுமைகள் முக்கியமாக இரண்டு விதமாக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஒன்று மேல்சாதியினரின் ஒடுக்குமுறைகள் ஏளனப்பேச்சுகள் கூனிக்குறுகச்செய்யும் இழிவுச் செயல்கள். மற்றொன்று மிகக்கொடிய சுயவிரக்கம் - எப்போதும் எங்கும் தன்னை தாக்கும் தாழ்வு மனப்பான்மையிலிருந்து வெளியேற முடியாத நிலைமை.
இது ஒரு நெடுங்கதை. ஆனால் படித்த / கேட்ட பிறகு உங்களுக்குள் எழும் கேள்விகளிடம் இருந்து தப்ப முடியாது . . .
நான் பதிந்திருக்கும் ஜெயமோகனின் மற்றைய கதைகள்
27 - 2 . யானை டாக்டர் - இறுதி பகுதி
27 - 1 . யானை டாக்டர் - முதல் பகுதி
Mon, 02 Jan 2023 - 2h 09min - 168 - 165.கண்ணாடிப் பரப்பு - கமலதேவிSun, 18 Dec 2022 - 10min
- 167 - 164. சௌந்தரவள்ளியின் மீசை - S. ராமகிருஷ்ணன்
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை.
அதோடு விடலைப் பருவ கவலைகளையும் சேர்ந்து கொண்டால்? அதிலும் கொடியது இதெல்லாம் நேர்வது ஒரு பெண்ணிற்கு. அம்மாவும் பெண்ணும் கட்டிக்கொண்டு அழுகையில் வாசகன் மனத்தை ஒரு பாறாங்கல் வந்து அடைக்கிறது.
அறிவியல் வாத்தியாரின் அறியாமை, அதனால் சீண்டப்பட்டு படிக்கும் வாய்ப்பையே இழக்கும் மாணவி. . .பெண்ணுக்கு என்று ஒரு இலக்கணம் வகுத்து அடைத்து வைக்கும் சமுதாயம், அவள் உடலில் ஏற்படும் பிறழ்தலுக்கும் அவளையே காரணமாக்கி ஏறி மிதிக்கிறது. . .என்னை மிகவும் பாதித்த கதை. . .
Sun, 11 Dec 2022 - 19min - 166 - 163. கடன் - அ. முத்துலிங்கம்
வயோதிகத்தோடு புலம்பெயர்ந்து செல்லவேண்டிய கட்டாயமும் சேர்ந்து கொண்ட கொடுமை. புதிய இடம், புதிய சூழல், வேறுபட்ட கலாசாரம் எல்லாம் ஒன்றாய் படுத்தும் பாடு. கணவன் மனைவியிடம் பட்ட கடன், மகன் தந்தையிடம் பட்ட கடன், முன்வினைக் கடன், தனிநபரிடம் அரசாங்கம் பட்ட கடன் ஒரு சிறுகதையில் இத்தனை பரிமாணங்களா? அ.முத்துலிங்கம் அசத்துகிறார்.
Sun, 04 Dec 2022 - 22min - 165 - 162. அனந்தசயனம் காலனி- தோப்பில் முகமது மீரான்Sun, 27 Nov 2022 - 21min
- 164 - 161. வணங்கான் - ஜெயமோகன்
நமக்கு இரண்டு மூன்று தலைமுறைகள் முன்னால் சாதியின் பெயரால் நடந்த கொடுமைகள் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? தெரிந்தால் இட ஒதுக்கீடு ஏன் சரியானது என்று புரியுமோ? நேசமணி என்ற பெருந்தலைவர் பற்றி தெரியாமலே போனதற்கு நாம் வெட்கப்பட வேண்டும் போல. ஜெயமொகனின் இந்தக் கதையில் அவர் கையாண்டிருக்கும் பரிமாணங்கள் படிமங்கள் எத்தனை எத்தனை? நடுநடுவே புன்னகைக்க வைக்கும் நகைச்சுவையும் உண்டு. . .
Mon, 12 Sep 2022 - 1h 04min - 163 - 160. கறிவேப்பிலைகள் - கி.ராWed, 06 Jul 2022 - 21min
- 162 - 159. முள்முடி - தி.ஜாSat, 16 Apr 2022 - 18min
- 161 - 158. தனியொருவனுக்கு - அசோகமித்திரன்Sun, 06 Mar 2022 - 13min
- 160 - 157. சித்தி - மா. அரங்கநாதன்Fri, 15 Oct 2021 - 12min
- 159 - 156. பேய்க்கொட்டு - நாஞ்சில் நாடன்Tue, 03 Aug 2021 - 30min
- 158 - 155. யோஷிகி - தி.ஜானகிராமன்Sun, 27 Jun 2021 - 25min
- 157 - 154. பூர்வீகம் - அ.முத்துலிங்கம்Mon, 07 Jun 2021 - 14min
- 156 - 153. வேப்பமரம் - ந. பிச்சமூர்த்திSat, 29 May 2021 - 10min
- 155 - 152. முனீரின் ஸ்பானர்கள் - அசோகமித்திரன்Wed, 26 May 2021 - 25min
- 154 - 151. கோமதி - கி.ராSun, 23 May 2021 - 23min
- 153 - 150. ஹார்மோனியம் - செழியன்
‘ஹார்மோனியம்’ என்கிற இந்த சிறுகதைக்காக செழியன் ‘கதா’ விருது பெற்றிருக்கிறார். .
தமிழின் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் செழியன். சிவகங்கையில் பிறந்தவர். பொறியியல் பட்டம் முடித்ததும், புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் தன்னை இணைத்துக்கொண்டு தமிழ்ப்படங்களில் ஒளிப்பதிவு செய்துகொண்டிருந்தார்.
ஒரு இசைக்கருவியைப் பற்றி இத்தனை நுட்பமாக எழுத முடியுமா என்று ஆச்சரியப் பட வைக்கும் செழியன் இசை எனும் சுகானுபவத்தை எழுத்தால் கண் முன் நிறுத்துகிறார். . .
Tue, 11 May 2021 - 40min - 152 - 149.பாம்பும் பிடாரனும் - வண்ணநிலவன்Wed, 10 Mar 2021 - 09min
- 151 - 148. பிளாக் நம்பர்: 27 திர்லோக்புரி – சாரு நிவேதிதாWed, 16 Dec 2020 - 45min
- 150 - 147. தாயார் பாதம் - ஜெயமோகன்Sun, 01 Nov 2020 - 26min
- 149 - 146. பாவம், பக்தர் தானே - ஜெயகாந்தன்Thu, 01 Oct 2020 - 16min
- 148 - 145. பள்ளம் - சுந்தர ராமசாமிSun, 13 Sep 2020 - 25min
- 147 - 144. கனவுக்கதை - சார்வாகன்Sun, 09 Aug 2020 - 15min
- 146 - 143. நுகம் - அ.எக்பர்ட் சச்சிதானந்தம்Wed, 29 Jul 2020 - 35min
- 145 - 142. கோளறு பதிகம் - ரஞ்சகுமார்Tue, 14 Jul 2020 - 32min
- 144 - 141. பணம் பிழைத்தது-பி.எஸ். இராமையாTue, 30 Jun 2020 - 21min
- 143 - 140. நிலைநிறுத்தல் - கி.ராWed, 24 Jun 2020 - 34min
- 142 - 139. அக்ரஹாரத்தில் பூனை - திலீப்குமார்Thu, 11 Jun 2020 - 23min
- 141 - 138. காலமும் ஐந்து குழந்தைகளும் - அசோகமித்திரன்
முதல் முறை படிக்கும்போதே ஏதோ நெருடியது. மறுமுறை படித்தபோது தெளிவானது போல் இருந்தது. ஆனால் மீண்டும் ஒருமுறை படித்தால் வேறு ஒரு கோணம் வெளிப்படுமோ? நிச்சயம் இது உலகத்தின் மிகச் சிறந்த சிறுகதைகள் பட்டியலில் இடம் பெறும். அசர வைக்கும் அசோகமித்திரன்.
Mon, 08 Jun 2020 - 17min - 140 - 137. அக்கினிப்பிரவேசம் - ஜெயகாந்தன்Sat, 06 Jun 2020 - 50min
- 139 - 136. பேயாண்டித் தேவரும் ஒரு கோப்பைத் தேநீரும் - கனிவண்ணன்Sat, 30 May 2020 - 14min
- 138 - 135. மாஞ்சு - சுஜாதா
யாரை நொந்து என்ன பயன் என்ற கூற்று நினைவு வருகிறது. எல்லாத் தாயார்களுக்குமே தனது அறிவாளிப் பிள்ளையை விட அசட்டுப் பிள்ளையைத் தான் பிடிக்கும் போல. அழகான விதவை படும்பாடு, வசதிகளுக்காக குணங்களை மாற்றிக் கொள்பவர்கள், சோம்பலாலும் திமிராலும் சரிந்து போன பிராமண செல்வாக்கு ஒவ்வொருவருக்கும் இருக்கும் தனித்தன்மையான திறமையை புறக்கணிக்கும் பொதுக்கல்வி முறை என்று பலவற்றை சிந்திக்க வைக்கிறது.
Wed, 13 May 2020 - 38min - 137 - 134. மைதானத்து மரங்கள் - கந்தர்வன்Sun, 10 May 2020 - 17min
- 136 - 133. சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல் - ஆதவன்
இரு இளைஞர்கள் - ஆணும் பெண்ணும். இருவருக்கும் தனக்கு வரப் போகும் வாழக்கைத் துணை பற்றிய ஒரு கற்பனை பிம்பம் அழுத்தமாக பதிந்துள்ளது. அந்த பிம்பத்துடன் ஒத்துப் பார்த்துக் கொண்டு ஒருவர் மற்றவரை சீண்டுகிறார்கள். இதில் மாயவலை அறுந்து காதலில் வீழ்கிறார்கள். . ஆதவன் கதைகளில் இருக்கும் ஆழமான உளவியல் ஆராய்ச்சி இந்தக் கதையிலும் பளிச்சிடுகிறது.
Fri, 08 May 2020 - 43min - 135 - 132. ஒரு கப் காப்பி - இந்திரா பார்த்தசாரதி
படிக்கும் காலத்தில் ஒழுங்காய் படிக்காமல் ஊரைச் சுற்றியதும் பிராமணனாய் பிறந்ததிற்கு பலனாகவாவது வேதங்களையும் படிக்காமல் உதவாக்கரையாய் சுற்றியவன் ராஜப்பா.ஐம்பது வயது வரை தாயார் உயிரோடு இருந்தவரை அண்ணனையும் அவன் குடும்பத்தையும் ஆதரித்த தம்பி இனிமேல் நீயே பார்த்துக்கொள் என்கிறான். கையால் உழைத்தறியாத ராஜப்பாவிற்கு வயிற்றால் உழைக்கும் வேலை கிடைக்கிறது. கஷ்ட ஜீவனம். ஒரு நாள், காலை காப்பிக்கே வழியில்லாமல் போக அவன் படும்பாடு. . .
Wed, 06 May 2020 - 24min - 134 - 131. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் - சுப்ரபாரதிமணியன்Mon, 04 May 2020 - 21min
- 133 - 130. பாற்கடல் - லா.ச.ரா
இந்தக் கதை பற்றி லா.ச.ரா எழுதியது
கணவன் மனைவி இருவரும் தனித்தனி இடங்களில் வேலைக்குப் போய்க்கொண்டு, வீட்டில் விட்டுச் சென்ற குழந்தை, பக்கத்து வீட்டுப் பாஞ்சாலை, எதிர் வீட்டு எல்லம்மாளின் பொறுப்பிலும் இரக்கத்திலும் எடுப்பார் கைப்பிள்ளையாக வளர்ந்து உருவாகிக் கொண்டும் இருக்கும் இந் தலைமுறைக்கு, இந்தக் கதையில் சொல்லப்படும் வாழ்க்கை, வாழ்க்கைமுறை, வெறும் தகவல் ரீதியாகவும் ஆச்சரியமாகவும் இருக்கக் கூடும்.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு - முக்குணங்களின் நிதர்சனம் கூட்டுக் குடும்ப வாழக்கை.
Dedicated, benevolent dictatorship க்கு எடுத்துக்காட்டு.
Sat, 02 May 2020 - 38min - 132 - 129. குடும்பத்தேர் - மெளனி
முன்னோடி சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவரான மெளனியின் படைப்பு. தாயின் மரணம் உண்டாக்கும் வெற்றிடம், கலக்கம் வாட்டுகிறது. கிழவியானாலும் குடும்ப நிர்வாகத்தை திறனுடன் வழிநடத்திச் செல்லும் அந்தத் தாய் விட்டப் போனதும் தான் அவள் ஆற்றி வந்த பணிகளின் முக்கியத்துவம் நமக்கு தெரிகிறது. தலைமுறைகளை இணைத்தாள்; குடும்ப வரலாற்றை பதிவு செய்தாள்; தவறுகளை இடித்துரைத்தாள்; துவளும்போதெல்லாம் ஆறுதல் சொன்னாள். . .இந்தப் பொறுப்புகளை உணர்ந்து ஏற்கும்போது சோகம் மறைகிறது, நம்பிக்கை மிளிர்கிறது.
Thu, 30 Apr 2020 - 19min - 131 - 128. மாயமான் - ந.பிச்சமூர்த்திTue, 28 Apr 2020 - 17min
- 130 - 127. வெயிலோடு போய் - ச.தமிழ்செல்வன்Sun, 26 Apr 2020 - 14min
- 129 - 126. ஸரஸாவின் பொம்மை - சி.சு.செல்லப்பாFri, 24 Apr 2020 - 16min
- 128 - 125. ஜீவரசம் - கல்கிWed, 22 Apr 2020 - 26min
- 127 - 124. இரணிய வதம் - சா.கந்தசாமி
தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட வேடம் போடும்போது அந்த பாத்திரத்தின் தீய குணங்கள் தொற்றிக்கொள்கின்றனவோ? இரணியன் வேடம் போடும் பெரும் கலைஞன் செய்யும் அநியாயங்கள் ஒரு முடிவிற்கு வருகிறது.
புயல் கதையில் ஏதும் செய்ய இயலாத கணவனைப் போல இன்றி இந்தக கதையின் நாயகன் பெண்மையை அவமதிப்பவனுக்கு பயங்கரமான தண்டனை கொடுக்கிறான்.
எளிய மக்களின் வாழ்க்கையை அவர்கள் அன்றாடம் சந்திக்கும் இன்னல்களை தன் கதைகளில் காட்டும் மிகச் சில எழுத்தாளர்களில் சா.கந்தசாமியும் ஒருவர்.
Mon, 20 Apr 2020 - 22min - 126 - 123. புயல் - கோபி கிருஷ்ணன்
மதுரையில் பிறந்த மற்றுமொரு நவீன சிறுகதை எழுத்தாளர் கோபி கிருஷ்ணன்.நடுத்தர வர்க்கத்தின் போலியான மதிப்பீடுகளையும் அவலங்களையும் தனது கதைகளில் தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டு வந்தவர்.( எஸ். ரா கட்டுரையிலிருந்து)
இந்தக் கதை நமது சமூகத்தின் பெண்கள் பற்றிய பார்வையை சுட்டு தகிக்கிறது. வேலைக்குப் போகும் பெண்கள் சந்திக்கும் பாலியல் வன்முறைகளை அதுபற்றி ஒன்றும் செய்ய முடியாத நமது இயலாமையை குத்திக் காட்டுகிறது. வெட்கக் கேடு என்னவென்றால் இன்றும் பெரும்பாலும் இதே நிலை தான்.
Sat, 18 Apr 2020 - 12min - 125 - 122. ரி - அ முத்துலிங்கம்
இந்த இலங்கை எழுத்தாளரின் மற்றுமொரு நல்ல கதை. முதுமை அடையும் மாடு கசாப்புக் கடைக்கு அனுப்பப்படுகிறது. பாசமாய் இருக்கும் சிறுமி வத்சலாவிற்குத் தெரியாமல். அவளுடைய நண்பன் தான் கதைசொல்லி. அபூர்வமான ராகத்தில் ஒன்றிப் பாடும் பாட்டு வாத்தியார். அந்த மார்க்க ஹிந்தோள ராகம் மனோரஞ்சிதப் பூவைப் போல. கேட்கவர் மனநிலைக்கு ஏற்ப ஆனந்தமாகவும் சோகமாகவும் அமைதியாகவும் ஒலிக்கும் ராகம். அதிலும் திரும்பி வராத ரிஷபம். கதையும் மெதுவாக துள்ளலோடு தொடங்கி வேகம் பெற்று குதித்து வளைந்து விரிந்து சென்று ஒரு அழுத்தத்தோடு முடிகிறது.
Thu, 16 Apr 2020 - 25min - 124 - 121. மீன்சாமியார் - எம்.எஸ்.கல்யாணசுந்தரம்
பலமுறை வியந்ததுண்டு எப்படிச் சில சாமியார்கள் "சக்தி" படைத்தவர்களாக இருக்கிறார்கள் என்று. பக்தர்களே அந்த சக்தியை அளிக்கிறார்கள் என்ற ஒரு வேறுபட்ட புரிதலைக் கொடுக்கிறது இந்தக் கதை. எம்.எஸ்.கல்யாணசுந்தரம் அவர்கள் நூற்றாண்டு கண்ட எழுத்தாளர் . அவரது ஒரே ஒரு புகைப்படம் கூட கிடைக்கவில்லை. அவரது பூர்வீகம், உறவினர்கள் எதைப்பற்றியும் தகவல் இல்லை. 1901 ல் மதுரையில் பிறந்தவர். காந்தியின் அழைப்பை ஏற்று வேலையை துறந்து கிராம நிர்மாண திட்ட்ங்களில் சேவையாற்றினார் . இறுதிவரை அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை . பின்தங்கிய உள்நாட்டு பகுதிகளில் நோயாளிகளுடன் வாழ்ந்தமை காரணமாக அவர் தொழுநோய்க்கு ஆளானதாகவும் வாழ்வின் இறுதிப்பகுதியில் மிகுந்த சிரமங்களை அடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. அவரது இறுதிநாட்கள் கோடைக்கானலில் கழிந்தது.
Tue, 14 Apr 2020 - 15min - 123 - 120. தரிசனம் - கு.அழகிரிசாமி
வாழ்க்கை காட்டும் பல காட்சிகளில் வெகுசில மட்டுமே தரிசனமாய் தெரிகிறது. அப்படியான தரிசனங்கள் கிடைக்கப் பெறுபவரை காண்பது கூட ஒரு தரிசனம்தான்.
வாழ்ந்து கெட்ட ஒரு அநாதை கிழவர். திண்ணையில் ஒரு ஓரத்தைக் கொடுத்த உரிமையில் அவரை இழிவுபடுத்தும் கணவன் மனைவி. ஒண்டிக்கொள்ள வரும் இன்னொரு அநாதைச் சிறுவன். பசியால் துடிக்கும் குஞ்சுகளைக் கண்டு செய்வதறியாது பரிதவிக்கும் குருவி. இவர்கள் தான் கதைமாந்தர்கள்.
Sun, 12 Apr 2020 - 20min - 122 - 119. தேள் - க.நா.சுSat, 11 Apr 2020 - 14min
- 121 - 118. அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை
ஒரு பெண் வளரும் குடும்பச் சூழ்நிலையிலேயே அவளுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், அவளை எந்த அளவுக்குப் பாதிக்கச் செய்கிறது என்பதை இந்தக் கதை பேசுகிறது.
சிறுமி ஒருத்தி வயதுக்கு வருகிறாள். அப்போது அவளுடைய தாய் ஊரில் இல்லை. உடலில் ஏற்படும் மாறுதல்களைக் கண்டு அச்சமடைகிறாள். அதற்குப் பிறகு தனக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளைக் கண்டு வியப்படைகிறாள். ஊரிலிருந்து வரப்போகும் தாயிடம் தனக்கு ஆதரவு கிடைக்கும், அஞ்சி நடுங்கும் தன்னை அவள் ஆதரவோடு அணைத்துக் கொண்டு ஆறுதல் சொல்வாள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
ஆனால் அந்தத் தாய் ஊரிலிருந்து வந்ததும், தேவதை போன்ற அம்மா, யதார்த்தத்துக்கு உட்பட்ட வெறும் மனித அம்மாவாகத் தெரிகிறாள். இந்த அதிர்ச்சியை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
Thu, 09 Apr 2020 - 23min - 120 - 117. ஒரு ராத்தல் இறைச்சி - நகுலன்Tue, 07 Apr 2020 - 08min
- 119 - 116. கன்னிமை - கி.ரா
மண் மணம் கமழும் இந்தக் கதையை கி.ரா கச்சிதமாக இரு பகுதிகளாக அமைத்திருக்கிறார். முதல் பகுதி திருமணமாகாத அக்காவின் புகழ் பாடும் தம்பியின் பார்வையில். இரண்டாம் பகுதி அவளை காதலித்து மணந்து கொண்ட கணவனின் பார்வையில்.
கன்னிப் பருவத்தில் எல்லோரிடமும் அன்பும் பரிவும் காட்டும் ஒரு பெண் எப்படி மாறிப் போகிறாள்? பிறர்க்காக என்றிருந்தவள் முழுக்க முழுக்க தனக்கு தன் குடும்பத்திற்கு மட்டும் என்று ஒடுங்கிப் போகிறாள். .
Sun, 05 Apr 2020 - 24min - 118 - 115. விரும்பிக் கேட்டவள் - எஸ். ராமகிருஷ்ணன்Fri, 03 Apr 2020 - 28min
- 117 - 114. ஸ்டாம்பு ஆல்பம் - சுந்தர ராமசாமி
ராஜப்பா, நாகராஜன் ஆகிய இரண்டு சிறுவர்களிடையே ஸ்டாம்பு சேர்ப்பதில் போட்டி ஏற்படுகிறது. ராஜப்பா அயராது உழைத்துப் பெற்ற பெயரை வெளிநாட்டிலிருந்து வந்துசேரும் ஸ்டாம்பு ஆல்பம் நாகராஜனுக்கு எளிதில் பெற்றுத் தருகிறது. ஸ்டாம்பு சேகரிப்பதில் நாகராஜனை விஞ்சுவதற்காக ராஜப்பா செய்யும் விபரீதச் செயலும், அதன் தொடர்ச்சியாக நடப்பதும் தான் இந்தக் கதை. . .என் பள்ளிப் பருவத்தை நினைவூட்டுகிறது. . .
Wed, 01 Apr 2020 - 17min - 116 - 113. அக்பர் சாஸ்திரி - தி.ஜானகிராமன்
ரயில் பயணங்களில் பலப் பல மனிதர்களை சந்திக்கிறோம். சிலர் பேசுவது எரிச்சலாக இருக்கும், சிலர் பேசுவது வியக்க வைக்கும். நாமும் இப்படி இருக்க வேண்டுமென்று தோன்றும். அப்படிப்பட்ட ஒருவர் தான் இந்த சாஸ்திரி. அவரது முற்போக்கான குணத்தால் அக்பர் சாஸ்திரி என்று பட்டப் பெயரிடப்படுகிறார். தி.ஜானகிராமனின் மனிதம் இழையோடும் வரிகளில் அவரின் கதை.
Mon, 30 Mar 2020 - 20min - 115 - 112. வளைகள் எலிகளுக்கானவை - நாஞ்சில் நாடன்
எத்தனை எத்தனை முறை நாம் அனைவரும் வெளி மாநிலத்திலிருந்து சுற்றுலா வரும் சாதாரண அடித்தள மக்களை கேவலமாக நினைத்திருக்கிறோம்? நமது அறியாமையை அல்லது அறிவுத் திமிரை சாட்டையடி கொடுத்து சுட்டிக் காட்டும் கதை.
Sat, 28 Mar 2020 - 24min - 114 - 111. ஒரே நண்பன் - ஜெயகாந்தன்Thu, 26 Mar 2020 - 37min
- 113 - 110. இங்கே , இங்கேயே - ஜெயமோகன்
வேற்றுக்கிரக வாசிகள் பூமிக்கு வருகிறார்கள். அவர்களது விண் ஊர்தியின் தடம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது என நம்பப்படும் கதைகளின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. கல்லன்மலை உச்சியில் உள்ள தடம் விண்வெளி ஊர்தியின் தடமாக இருக்க வேண்டும் என நம்புகிறார் நாராயணன் . இல்லை அது அவ்வாறு இருக்க முடியாது என பத்மநாபன் கூறும் காரணங்கள் அறிவியல் ரீதியானவை.
ஜெயமோகன், தரமான அறிவியல் புனைவு என்பது நடைமுறை அறிவியலுடன் நமது ஆழ் மனம் தனக்குரிய பாரம்பரிய அறிவியல் முறையுடன் தொடர்பு கொள்ளும்பொழுது உருவாகிறது என்கிறார்
Tue, 24 Mar 2020 - 15min - 112 - 109. சாஸ்தாப் பிரீதி-அ. மாதவையா
இந்தக் கதை மாதவையாவின் 'குசிகர் குட்டிக் கதைகள்' தொகுதியில் இடம் பெற்றிருக்கிறது. ஏறத்தாழ நூறாண்டுகளுக்கு முன் எழுதிய கதை. கடுமையான சமூக விமர்சனங்களை முன்வைத்த கதைகள் தந்த மாதவையாவைப் பற்றி கண்டனம் தெரிவித்த 'தி இந்து' நாளிதழ், ஒரே வருடத்தில், தானே முன்வந்து தன் நாளிதழில் கதைகளை ஆங்கிலத்தில் எழுத அவரை வேண்டிக் கொண்டது.
அ. மாதவையா தமிழின் ஒரு முன்னோடி எழுத்தாளர், நாவலாசிரியர், பத்திரிக்கையாசிரியர், எழுத்தின் மூலம் சமூக சீர்திருத்தம் கொண்டுவருவதில் நம்பிக்கை உடையவர். பத்மாவதி சரித்திரம் என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவர். ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் புலமைப் பெற்றவர்.
Sun, 22 Mar 2020 - 14min - 111 - 108. கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் - இறுதிப் பகுதி - புதுமைப்பித்தன்Thu, 12 Mar 2020 - 20min
- 110 - 108. கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் - முதல் பகுதி - புதுமைப்பித்தன்Mon, 09 Mar 2020 - 21min
- 109 - 107. போட்டி - பூமணிSun, 23 Feb 2020 - 15min
- 108 - 106. வெறும் செருப்பு - ந.பிச்சமூர்த்திFri, 24 Jan 2020 - 13min
- 107 - 105. உத்யோக ரேகை - சார்வாகன்Sun, 19 Jan 2020 - 24min
- 106 - 104. அரிசி - சுஜாதா
நம் நாட்டில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் பெரும்பாலும் காப்பாற்றிவிடலாம். ஆனால் இந்த கதை எழுதப்பட்ட காலத்தில் விபத்து கேஸ்களை போலீஸுக்கு தெரிவித்து, அவர்கள் வந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் 90% சதவிகித விபத்துக்குள்ளானவர்கள் இறந்துபோய்விடுவார்கள். அதை விட கொடுமை, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய முற்படுபவர்கள் காவல் நிலையம், வழக்கு என இழுத்தடிக்கப்படுவதால் உதவ மனமிருந்தும் உதவி செய்யாமல் மனதை கல்லாக்கிக்கொள்பவர்களை பற்றிய சிறுகதை இது.இன்று நிலைமை மாறியிருக்கிறது. விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு எந்த ஒரு மருத்துவமனையும் உடனடி சிகிச்சை அளிக்கலாம்.
Tue, 14 Jan 2020 - 11min - 105 - 103. புவியீர்ப்புக் கட்டணம் - அ.முத்துலிங்கம்Sun, 12 Jan 2020 - 17min
- 104 - 102. காந்தி - அசோகமித்திரன்
வெறுப்பு - மனிதனை ஆட்டிப்படைக்கும் உணர்ச்சிகளில் மிக முக்கியமான ஒன்று. அந்த உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருக்கும் ஒருவனின் எண்ண ஓட்டங்களின் பதிவு தான் இந்த கதை. வழக்கமான கதைகளின் ஆரம்பம், முடிவு, திருப்பங்கள் போன்ற அம்சங்கள் இல்லாததினால் கதை தானா என்று சந்தேகம் வரலாம். ஆனால் ஆசிரியரின் அருமையான படைப்புகளில் ஒன்று. காந்தியடிகளின் மொத்த வாழ்க்கையை, செய்தியை இரண்டே வரிகளில் படம் பிடித்து விட்டார் அசோகமித்திரன். 102 வது சிறுகதை பதிவு.
Sat, 11 Jan 2020 - 27min - 103 - 101. அப்பாவும் மகனும் - ஜெயமோகன்
உணர்ச்சிமயமான எண்ணச் சிதறல்கள் நிறைந்த ஒரு கதை. அடிமனதில் புதைந்து கிடக்கும் குற்ற உணர்வு திடீரென்று பொங்கி வருகிறது தன் மகனோடு கோபம் கொள்ளும் போது. . . புத்தாண்டின் முதல் கதை. மொத்தத்தில் 101வது சிறுகதை.
Thu, 09 Jan 2020 - 24min - 102 - 100. பூசணிக்காய் அம்பி - புதுமைப்பித்தன்
குறும்புக்கார சிறுவனைப் பற்றிய கதை. நகைச்சுவை தளும்பி ஓடுகிறது! சந்தடி சாக்கில் அன்றைய தமிழ் இலக்கிய சூழலையும் துப்பறியும் கதை அபத்தங்களையும் நையாண்டி செய்கிறார் இந்த மாபெரும் கதைசொல்லி!
Tue, 03 Dec 2019 - 12min
Podcasts ähnlich wie தமிழ் சிறுகதைகள் , Tamil Short stories
El Partidazo de COPE COPE
Herrera en COPE COPE
La Linterna COPE
Es la Mañana de Federico esRadio
La noche de Cuesta esRadio
Hondelatte Raconte Europe 1
Au Coeur du Crime Europe1
Affaires sensibles France Inter
LEGEND Guillaume Pley
El colegio invisible OndaCero
La Rosa de los Vientos OndaCero
Les grands dossiers de l'Histoire par Franck Ferrand Radio Classique
Espacio en blanco Radio Nacional
Enquêtes criminelles RTL
Entrez dans l'Histoire RTL
Le grand récit RTL
Les Grosses Têtes RTL
L'Heure Du Crime RTL
Parlons-nous RTL
El Larguero SER Podcast
SER Historia SER Podcast
Todo Concostrina SER Podcast
Un Libro Una Hora SER Podcast
HISTORIAS DE LA HISTORIA VIVA RADIO
