Filtra per genere

புத்தகம் சூழ் உலகம்

புத்தகம் சூழ் உலகம்

Siva Subramaniam

எங்கள் பனுவல் பையன் தேடி எடுத்து சிறுவர்களுக்கான நல்ல தமிழ் புத்தங்களை ஒவ்வொரு மாதமும் கொண்டு வந்து கொடுக்கும் பகுதி இது.

6 - ஆ05 - பேசும் தாடி
0:00 / 0:00
1x
  • 6 - ஆ05 - பேசும் தாடி

    சூர்யாவுக்கும் சுகானாவிற்கும் ஒரே ஆச்சர்யம் தாத்தா

    ஏன் தாடியோட வந்திருக்காங்கனு. அப்போதான் அவங்க

    கவனிச்சாங்க, தாத்தா தாடிக்குள்ள இருந்து குரல் கேட்குது.

    ரொம்ப ஆச்சர்யபட்டுகிட்டே கிட்ட போய் பார்த்தா தான் தெரியுது தாத்தா தாடிக்குள்ள சித்திர குள்ளர்கள் நிறைய பேர் இருக்காங்க. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வண்ணத்துல இருக்காங்க. இவங்களுக்கு ஒரே ஆச்சர்யம். தாத்தா, இந்த சித்திர குள்ளர்கள் பத்தி யார் கிட்டயும் சொல்லாம இருந்தா உங்களுக்கு இன்னும் நிறைய அதிசயங்கள் அவங்க காட்டுவாங்கனு சொல்றாங்க. இவங்களும் சரினு அதுக்கு ஒத்துகிட்டாங்க. அப்புறம் அதுல இருந்து ஒரு சித்திரகுள்ளர் அவரோட கையில இருக்கும் வண்ணப்பொடியை சூர்யா மேலயும், சுகானா மேலயும் தூவுறாங்க, உடனே சூர்யாவும் சுகானாவும் சித்திர குள்ளர்கள் மாதிரியே சின்னதா ஆகிடறாங்க. தாத்தாவும் தான். இதுக்கு அப்புறம் இவங்க எல்லோரும் சேர்ந்து பண்ணுற சாகசங்களை பத்தி தெரிஞ்சுக்கனும்னா இந்த புத்தகத்தை வாங்கி படிங்க.

    Thu, 13 Aug 2020 - 03min
  • 5 - ஆ04 - மாயக் கண்ணாடி இதழ்

    இந்த புத்தகத்தோட அட்டையே ரொம்ப வித்தியாசமா இருக்கு. புத்தகத்தை வாங்கி பார்த்ததுமே நான் ஆச்சர்யப்பட்டு போய்ட்டேன். ஏன்னா அட்டை படத்துல என்னோட உருவம் இருந்துச்சு. உடனே ஓடிப் போய் என் நண்பன்கிட்ட பெருமையா காண்பிச்சேன். பார்த்தியா இந்த புத்தகத்தோட அட்டைல என் படம் வந்திருக்குனு. என் நண்பன் வாங்கி பார்த்து,

    பொய் சொல்லாதடா, இதுல என் படம் இருக்குனு சொன்னான். அப்புறம் தான்

    கவனிச்சேன், இந்த புத்தகத்தோட தலைப்புக்கு ஏத்த மாதிரியே புத்தக அட்டைல

    ஒரு கண்ணாடி ஒட்டிருக்காங்க. அதுல இந்த புத்தகதை படிக்கிறவங்க உருவம்

    தெரியும். வித்தியாசமா இருக்குல. இதே போலத் தான் உள்ள இருக்கிற

    கதைகளும் வித்தியாசமா இருக்கும். படிச்சு பாருங்க.

    Tue, 14 Jul 2020 - 04min
  • 4 - ஆ03 - றெக்கை இதழ்

    , சித்திர கதைகள் (காமிக்ஸ் வடிவிலான கதைகள்), ஓவியம் வரைவதற்கான பயிற்சி என இன்னும் பல சுவாரசியமான தகவல்கள் நிறைய இருக்கு இந்த றெக்கை இதழில்.

    2 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் இந்த இதழில் இப்போ இருக்கும்

    நெருக்கடியான காலகட்டத்துல உங்களைப் போன்ற சுட்டிகளில் வீட்டில்

    இருந்து படிப்பதற்கு ஏதுவாக சில இதழ்களை இணையத்தில் இலவசமாக

    கொடுத்திருக்காங்க. உங்க பெற்றோரிடம் சொல்லி இந்த சுட்டிக்கு சென்று

    இலவசமாக பதிவிறக்கி கொள்ளலாம் https://www.facebook.com/RekkaiMagazine/

    றெக்கை இதழை படிச்சிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க. வழக்கம் போல

    பாதுகாப்பா இருங்க.

    Thu, 11 Jun 2020 - 02min
  • 3 - ஆ02 - துளிர் இதழ்

    கேள்வி கேட்குறவங்களுக்கு அந்த பதில் தெரியலேன்னா நீங்களே கண்டுபிடிக்க முயற்சி பண்ணுங்க. சரி அப்படி நீங்களே கண்டு பிடிக்கனும்னா எப்படி பண்றதுனு யோசிக்கிறீங்களா? அதுக்கு உதவி செய்றது தான் இன்னிக்கு நான் உங்களுக்காக கொண்டு வந்திருக்கிற புத்தகம். புத்தகம்னு சொல்றத விட மாத இதழ்னு சொல்லலாம். மாத இதழ்னா ஒவ்வொரு மாதமும் ஒரு புத்தகம் வெளி வரும். இந்த மாத இதழோட பெயர் “துளிர்”.

    Sat, 09 May 2020 - 03min
  • 2 - ஆ01 - எனக்கு பிடிச்ச கலரு

    என்ன புத்தகம்னு சொல்றதுக்கு முன்னாடி உங்களுக்கு பிடிச்ச வண்ணம் ஒன்னு சொல்லுங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வண்ணம் பிடிக்கும். நீலம், பச்சை, சிவப்பு, கருப்புனு ஏகப்பட்ட வண்ணங்கள் இருக்கு இந்த உலகத்துல. ஒரு நாள் இந்த வண்ணங்கள்லாம் உலகத்துல இருந்து மாயமா மறைஞ்சு போய்ட்டா என்னாகும்? வண்ணமே இல்லாத வீடு, தொலைக்காட்சில கூட வண்ணங்கள் எதுவும் இல்லாம பழைய படங்கள் மாதிரி கருப்பு வெள்ளையா தெரியும். நாம போட்டிருக்கிற எல்லா உடைகளும் வண்ணம் இல்லாம போனா நல்லாவே இருக்காது. அப்பப்பா, வண்ணங்கள் இல்லாத உலகம் ரொம்ப கடினமா இருக்கும் இல்லையா?

    இது பற்றிய புத்தகம் தான் இன்னைக்கு நான் உங்களுக்கு எடுத்திட்டு வந்திருக்கிறது. புத்தகத்தோட தலைப்பு

    எனக்கு பிடிச்ச கலரு”. இதை எழுதியவர் பஞ்சு மிட்டாய் பிரபு.

    Wed, 08 Apr 2020 - 03min
Mostra altri episodi