Filtrar por género

SBS Tamil - SBS தமிழ்

SBS Tamil - SBS தமிழ்

SBS

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

14647 - பத்துப் பேர் காயமடைந்த Newcastle கார் விபத்து: இந்திக்க சமரசிங்க மீது வழக்குத் தாக்கல்
0:00 / 0:00
1x
  • 14647 - பத்துப் பேர் காயமடைந்த Newcastle கார் விபத்து: இந்திக்க சமரசிங்க மீது வழக்குத் தாக்கல்

    அக்டோபர் 3 சனிக்கிழமை Newcastle Knights அணியின் ரசிகர்கள் கூட்டத்துக்குள் கார் ஒன்று மோதியதாகக் கூறப்படும் சம்பவத்தில், இளம் ஓட்டுநர் மீது 9 பிரிவுகளில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

    #sbsaudiopodcast

    Tue, 06 Oct 2026 - 02min
  • 14646 - இன்றைய செய்திகள்: 06 அக்டோபர் 2026 - செவ்வாய்க்கிழமை

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 06/10/2026) செய்திகள். வாசித்தவர் றேனுகா துரைசிங்கம்.

    Tue, 06 Oct 2026 - 04min
  • 14645 - Why power is split, and how that protects you | How Australia Works - அதிகாரம் ஏன் பிரிக்கப்படுகிறது, அது உங்களை எவ்வாறு பாதுகாக்கிறது|ஆஸ்திரேலியா எவ்வாறு இயங்குகிறது?

    After receiving a fine for not wearing his motorbike helmet correctly, Hugo decides to have the matter heard in court. His story explains how Parliament, government and the courts have different roles, and how some official decisions can be questioned. - மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்தைச் சரியாக அணியாததற்காக அபராதம் விதிக்கப்பட்ட ஹியூகோ (Hugo) அந்த விவகாரத்தை நீதிமன்றத்தில் முன்வைக்க முடிவு செய்கிறார். நாடாளுமன்றம், அரசு மற்றும் நீதிமன்றங்கள் எவ்வாறு வெவ்வேறு பணிகளைச் செய்கின்றன என்பதையும், சில அதிகாரப்பூர்வ முடிவுகளை எவ்வாறு கேள்விக்குட்படுத்தலாம் என்பதையும் அவரது கதை விளக்குகிறது.

    How Australia Works is an SBS podcast that uses real stories and clear explanations to help you understand how government work in Australia, how laws are made and changed, and how you can have a say. Listen to the series and find shorter versions in 60 languages on the How Australia Works main page. - How Australia Works என்பது ஒரு SBS வலையொலி (podcast) ஆகும். இது உண்மையான கதைகள் மற்றும் தெளிவான விளக்கங்கள் மூலம், ஆஸ்திரேலியாவில் அரசு எவ்வாறு செயல்படுகிறது, சட்டங்கள் எவ்வாறு உருவாக்கப்பட்டு மாற்றப்படுகின்றன, மற்றும் இதில் நீங்கள் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது. இத்தொடரைக் கேளுங்கள்; அத்துடன் 'How Australia Works' முதன்மைப் பக்கத்தில் 60 மொழிகளில் இதன் சுருக்கமான வடிவங்களையும் காணலாம்.

    Tue, 06 Oct 2026 - 07min
  • 14644 - மெல்பனின் சில சாலைகளில் வேக வரம்பு 30km/h ஆக குறைக்கப்படுகிறது

    மெல்பனின் சில பகுதிகளில், வாகனங்களுக்கான வேக வரம்பு குறைக்கப்படும் புதிய சோதனைத் திட்டம் தொடங்குகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

    #sbsaudiopodcast

    Mon, 05 Oct 2026 - 02min
  • 14643 - 12 உயிர்களைக் காவுகொண்ட ஆஸ்திரேலியாவின் பயங்கர தொடர்கொலை: ஏன் இன்று மீண்டும் பேசப்படுகிறது?

    ஆஸ்திரேலியாவின் குற்ற வரலாற்றில் மிகவும் அதிர்ச்சியூட்டிய சம்பவங்களில் ஒன்று ஸ்னோடவுன் பேரல் கொலைகள். 12 பேரின் உயிரைப் பறித்த இந்தத் தொடர் கொலைகள் பல ஆண்டுகள் மறைக்கப்பட்டிருந்தன. இந்த வழக்கில் குற்றம் ஒப்புக்கொண்டவர்களில் ஒருவரான ஜேம்ஸ் வ்லாசாக்கிஸ் 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த பிறகு தற்போது பரோல் வழங்கப்பட்டு சமூகத்திற்குத் திரும்புவதற்கான நடைமுறையில் உள்ளார். இதையொட்டி, ஆஸ்திரேலியாவை உலுக்கிய அந்த வழக்கை மீண்டும் திரும்பிப் பார்க்கின்றார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள்.

    12 lives lost in Australia's worst serial murders: Why is it back in the spotlight?

    Mon, 05 Oct 2026 - 10min
Mostrar más episodios