Filtrar por gênero
- 14647 - பத்துப் பேர் காயமடைந்த Newcastle கார் விபத்து: இந்திக்க சமரசிங்க மீது வழக்குத் தாக்கல்
அக்டோபர் 3 சனிக்கிழமை Newcastle Knights அணியின் ரசிகர்கள் கூட்டத்துக்குள் கார் ஒன்று மோதியதாகக் கூறப்படும் சம்பவத்தில், இளம் ஓட்டுநர் மீது 9 பிரிவுகளில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
#sbsaudiopodcastTue, 06 Oct 2026 - 02min - 14646 - இன்றைய செய்திகள்: 06 அக்டோபர் 2026 - செவ்வாய்க்கிழமைTue, 06 Oct 2026 - 04min
- 14645 - Why power is split, and how that protects you | How Australia Works - அதிகாரம் ஏன் பிரிக்கப்படுகிறது, அது உங்களை எவ்வாறு பாதுகாக்கிறது|ஆஸ்திரேலியா எவ்வாறு இயங்குகிறது?
After receiving a fine for not wearing his motorbike helmet correctly, Hugo decides to have the matter heard in court. His story explains how Parliament, government and the courts have different roles, and how some official decisions can be questioned. - மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்தைச் சரியாக அணியாததற்காக அபராதம் விதிக்கப்பட்ட ஹியூகோ (Hugo) அந்த விவகாரத்தை நீதிமன்றத்தில் முன்வைக்க முடிவு செய்கிறார். நாடாளுமன்றம், அரசு மற்றும் நீதிமன்றங்கள் எவ்வாறு வெவ்வேறு பணிகளைச் செய்கின்றன என்பதையும், சில அதிகாரப்பூர்வ முடிவுகளை எவ்வாறு கேள்விக்குட்படுத்தலாம் என்பதையும் அவரது கதை விளக்குகிறது.
How Australia Works is an SBS podcast that uses real stories and clear explanations to help you understand how government work in Australia, how laws are made and changed, and how you can have a say. Listen to the series and find shorter versions in 60 languages on the How Australia Works main page. - How Australia Works என்பது ஒரு SBS வலையொலி (podcast) ஆகும். இது உண்மையான கதைகள் மற்றும் தெளிவான விளக்கங்கள் மூலம், ஆஸ்திரேலியாவில் அரசு எவ்வாறு செயல்படுகிறது, சட்டங்கள் எவ்வாறு உருவாக்கப்பட்டு மாற்றப்படுகின்றன, மற்றும் இதில் நீங்கள் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது. இத்தொடரைக் கேளுங்கள்; அத்துடன் 'How Australia Works' முதன்மைப் பக்கத்தில் 60 மொழிகளில் இதன் சுருக்கமான வடிவங்களையும் காணலாம்.Tue, 06 Oct 2026 - 07min - 14644 - மெல்பனின் சில சாலைகளில் வேக வரம்பு 30km/h ஆக குறைக்கப்படுகிறது
மெல்பனின் சில பகுதிகளில், வாகனங்களுக்கான வேக வரம்பு குறைக்கப்படும் புதிய சோதனைத் திட்டம் தொடங்குகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
#sbsaudiopodcastMon, 05 Oct 2026 - 02min - 14643 - 12 உயிர்களைக் காவுகொண்ட ஆஸ்திரேலியாவின் பயங்கர தொடர்கொலை: ஏன் இன்று மீண்டும் பேசப்படுகிறது?
ஆஸ்திரேலியாவின் குற்ற வரலாற்றில் மிகவும் அதிர்ச்சியூட்டிய சம்பவங்களில் ஒன்று ஸ்னோடவுன் பேரல் கொலைகள். 12 பேரின் உயிரைப் பறித்த இந்தத் தொடர் கொலைகள் பல ஆண்டுகள் மறைக்கப்பட்டிருந்தன. இந்த வழக்கில் குற்றம் ஒப்புக்கொண்டவர்களில் ஒருவரான ஜேம்ஸ் வ்லாசாக்கிஸ் 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த பிறகு தற்போது பரோல் வழங்கப்பட்டு சமூகத்திற்குத் திரும்புவதற்கான நடைமுறையில் உள்ளார். இதையொட்டி, ஆஸ்திரேலியாவை உலுக்கிய அந்த வழக்கை மீண்டும் திரும்பிப் பார்க்கின்றார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள்.
12 lives lost in Australia's worst serial murders: Why is it back in the spotlight?Mon, 05 Oct 2026 - 10min - 14642 - அரசு ஏன் சர்வதேச மாணவர்களுக்கான பட்டயப் படிப்பு (Graduate Diploma course) வீசாவை நீக்கியது?
சர்வதேச மாணவர் வீசா முறையில் நடக்கும் முறைகேடுகளுக்கு எதிராக, ஆஸ்திரேலிய அரசு தனது பிடியை மேலும் இறுக்கியுள்ளது. இன்று, அக்டோபர் ஐந்தாம் தேதியுடன் ஒரு டிப்ளோமா படிப்புக்காக வழங்கப்படும் வீசா நீக்கப்படுகிறது. ஆனால் அதற்குள், கிட்டத்தட்ட மூவாயிரம் மாணவர்கள் அந்தப் படிப்பில் சேர, கடைசி நிமிடத்தில், அவசர அவசரமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப்படியான நடவடிக்கை மூலம், “ஏமாற்ற முயலாதீர்கள்!” என்று - கல்லூரிகள், முகவர்கள், மாணவர்கள் என மூன்று தரப்புக்கும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Mon, 05 Oct 2026 - 09min - 14641 - இன்றைய செய்திகள்: 05 அக்டோபர் 2026 - திங்கட்கிழமைMon, 05 Oct 2026 - 04min
- 14640 - இந்தியா & தமிழ்நாடு: கடந்த 7 நாட்கள் செய்திகளின் தொகுப்பு
தமிழகத்தை உலுக்கி வரும் 'ஜெம்' வீரமணி பாலியல் வழக்கு - 'ஜெம்' வீரமணி மீது குண்டர் சட்டம்; மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் - பரபரக்கும் தமிழக அரசியல் களம்; உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
#sbsaudiopodcastMon, 05 Oct 2026 - 09min - 14639 - இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (27 செப்டம்பர் – 3 அக்டோபர் 2026)
ஆஸ்திரேலியாவின் இந்த வார (27 செப்டம்பர் – 3 அக்டோபர் 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.
Top news from Australia this week (27 September – 3 October 2026)Sat, 03 Oct 2026 - 06min - 14638 - Western Sydney விமான நிலையத்திலிருந்து City செல்ல பேருந்து கட்டணம் எவ்வளவு?
சிட்னியின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள புதிய Western Sydney சர்வதேச விமான நிலையத்திலிருந்து Sydney CBD-க்கு இயக்கப்படவுள்ள நேரடி Shuttle பேருந்து சேவைக்கான கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
#sbsaudiopodcastFri, 02 Oct 2026 - 02min - 14637 - Do you know how to disagree respectfully? - SBS Examines: மரியாதையுடன் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்துவது எப்படி?
Half of us believe that most people can’t be trusted. At the same time, 47 per cent of Australians often feel very lonely. Could learning to disagree well help foster connection? - எம்மில் பாதிப் பேர், பெரும்பாலான மக்களை நம்ப முடியாது என்று நினைக்கிறோம். அதே நேரத்தில், இந்நாட்டில் வசிக்கும் 47 சதவீதமானவர்கள் மிகவும் தனிமையாக இருப்பதாக அடிக்கடி உணர்கிறார்கள். கருத்து வேறுபாடுகளை நன்கு கையாளக் கற்றுக்கொள்வது, உறவுகளை வளர்க்க உதவுமா? SBS Examinesற்காக Lera Shvets எழுதிய விவரணத்தைத் தமிழில் எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
#sbsaudiopodcast - #sbsaudiopodcastFri, 02 Oct 2026 - 08min - 14636 - ஆஸ்திரேலிய மாணவர் விசாவில் இன்று முதல் புதிய மாற்றங்கள்
அக்டோபர் 2ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்வகையில் ஆஸ்திரேலிய மாணவர் விசாவில் அரசு மாற்றங்களை அறிவித்துள்ளது. இதுதொடர்பில் விளக்குகிறார் Ramyam Australian Education and Visa Services நிறுவனரும் குடிவரவு முகவருமான Dr அண்ணாமலை மகிழ்நன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்
#sbsaudiopodcastFri, 02 Oct 2026 - 10min - 14635 - புதிய நாடு, புதிய வாழ்க்கை, புதிய சவால்கள்: சர்வதேச மாணவர்கள் என்ன செய்யலாம்?
ஆஸ்திரேலியாவில் படிக்கும் பல சர்வதேச மாணவர்கள் கல்வியுடன் சேர்த்து தனிமை, பண அழுத்தம், குடும்ப எதிர்பார்ப்புகள் மற்றும் மனஅழுத்தம் போன்ற சவால்களையும் எதிர்கொள்கிறார்கள். இப்படியான சிக்கல்களை எதிர்கொள்ளும் மாணவர்கள் என்ன செய்யவேண்டும் என்று விளக்குகிறார் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இணையவழி ஆலோசனை சேவைகளை வழங்கி வருகின்ற Mind Matterz Counselling mind-matterz-counselling.netlify.app நிறுவனர் இளவரசி ராஜா அவர்கள். Australian Counselling Association-இன் பதிவு பெற்ற ஆலோசகரான இளவரசியுடன் உரையாடுகிறார் றைசெல்.
New country, new challenges: Navigating life as an international studentFri, 02 Oct 2026 - 12min - 14634 - இன்றைய செய்திகள்: 02 அக்டோபர் 2026 - வெள்ளிக்கிழமைFri, 02 Oct 2026 - 04min
- 14633 - இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள்
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டத்தின் வரைபு அரசினால் வெளியிடப்பட்டுள்ளது. புதிய சட்ட வரைபு தொடர்பில் பலரும் எதிர்ப்பு; இலங்கையில் அதிகரித்து செல்லும் வீதி விபத்துக்களினால் வருடாந்தம் சுமார் 2500 பேர் உயிரிழப்பு இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Top news from Sri Lanka this weekFri, 02 Oct 2026 - 08min - 14632 - Daylight saving நேரமாற்றம் நடைமுறைக்கு வருகிறது!
ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் Daylight saving நேரமாற்றம் Oct 4 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணிக்கு நடைமுறைக்கு வருகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
#sbsaudiopodcastThu, 01 Oct 2026 - 03min - 14631 - நடுவானில் நடந்த திகில்: Flydubai விமானத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம்
நடுவானில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த Flydubai விமானம்… பயணிகள் கண்முன்னே நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம். உயிருக்கு ஆபத்தான சூழலில், விமானத்தை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, 174 பேரையும் காப்பாற்றிய அந்த சில நிமிடங்கள் எப்படி இருந்தன? இச் செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Thu, 01 Oct 2026 - 08min - 14630 - ஆஸ்திரேலியாவை அடையாளப்படுத்தும் ஈம்யு: ஆச்சரிய தகவல்கள்
கங்காருவைப் போலவே ஆஸ்திரேலியாவின் அடையாளமாக அறியப்படும் இன்னொரு உயிரினம் ஈம்யு. பறக்க முடியாது; ஆனால் மிக வேகமாக ஓடும். கடும் வெப்பத்தையும் உணவுப் பற்றாக்குறையையும் தாங்கும். அதிலும், முட்டைகளை அடைகாத்து குஞ்சுகளை வளர்ப்பது ஆண் ஈம்யு என்பது இன்னொரு ஆச்சரியம். இப்படிப் பல தனித்துவங்களைக் கொண்ட ஆஸ்திரேலியாவின் ஈம்யு பறவை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சியில் தொகுத்து வழங்குகிறார் கீதா மதிவாணன். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Thu, 01 Oct 2026 - 08min - 14629 - முதன்முறையாகப் பறை இசைக்குக் கலைமாமணி வென்ற பனையூர் ராஜா!
கலை மற்றும் இலக்கியத் துறையில் சிறப்பான பங்களிப்பு செய்பவர்களுக்கு வருடாவருடம் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், கலைமாமணி விருதுகளை வழங்கி வருகிறது. 8 வருட இடைவெளிக்குப் பிறகு, 2011 ஆம் ஆண்டிலிருந்து 2018 ஆம் ஆண்டிற்கான விருதுகள் 2018ஆம் ஆண்டு வழங்கப்பட்டன. அதன்போது, முதன்முறையாக, ஒரு பறை இசைக் கலைஞருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. அந்த விருது பெற்ற டாக்டர் பனையூர் ராஜாவுடன் குலசேகரம் சஞ்சயன் 2018ஆம் ஆண்டு நடத்திய நேர்முகத்தின் மறு ஒலிபரப்பு.
Thu, 01 Oct 2026 - 14min - 14628 - சிட்னி விமானநிலையத்திலிருந்து பயணிப்பது ஆபத்தானதா?
சிட்னி விமான நிலையத்தில் ஜூலை 27ஆம் தேதி இரண்டு பயணி விமானங்கள் ஒன்றுக்கொன்று வெறும் 120 மீட்டர் தூரத்தில் ஓடுபாதையில் அவசரமாக நிறுத்தப்பட்டன. ஒரு விமானத்தில் 157 பேர். மற்றதில் 55 பேர். ஒரு பெரும் அனர்த்தம் மயிரிழையில் தவிர்க்கப்பட்டது. பதிவுகள் 2003ஆம் ஆண்டில் தொடங்கியதிலிருந்து, ஆஸ்திரேலியாவில் நடந்த மிக மோசமான ஓடுபாதை நிகழ்வுகளில் இதுவும் ஒன்று என்று, நாட்டின் போக்குவரத்துப் பாதுகாப்பு விசாரணை அமைப்பு, நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சிட்னி விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடந்த ஆபத்தான நிகழ்வுகள் பற்றிய முதற்கட்ட அறிக்கைகள் இப்போது வெளியாகியுள்ளன. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Thu, 01 Oct 2026 - 11min - 14627 - இன்றைய செய்திகள்: 01 அக்டோபர் 2026 - வியாழக்கிழமைThu, 01 Oct 2026 - 04min
- 14626 - Bathlaவின் சரிவு: வீடு கட்டுபவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?
ஆஸ்திரேலியாவின் கட்டுமானத் துறை தற்போது பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. வீட்டுச் சந்தை மாற்றங்கள், அதிகரித்த கட்டுமானச் செலவுகள் மற்றும் நிதி அழுத்தங்களுக்கு மத்தியில், Bathla Group போன்ற பெரிய கட்டுமான நிறுவனத்தின் வீழ்ச்சி பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இதன் பின்னணியில், Bathla நிறுவனத்தின் முன்னாள் ஊழியரும், கட்டுமானத் துறையில் அனுபவம் கொண்டவரும், சிட்னியில் Sydneywide Homes எனும் கட்டுமான நிறுவனத்தினை நடத்திவருபவருமான தேவகுமார் சந்திரராஜ் அவர்களுடன் உரையாடினோம். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.
#sbsaudiopodcastWed, 30 Sep 2026 - 16min - 14625 - இன்றைய செய்திகள்: 30 செப்டம்பர் 2026, புதன்கிழமைWed, 30 Sep 2026 - 03min
- 14624 - நான்காவது தடவையாக உயர்ந்த வட்டி விகிதம்: வீட்டுக்கடன் வைத்திருப்பவர்களை எவ்வாறு பாதிக்கும்
ஆஸ்திரேலியாவின் அதிகாரபூர்வ வட்டி வீதத்தை 4.6 ஆக உயர்த்தும் தனது முடிவினை ரிசர்வ் வங்கி செவ்வாய்க்கிழமை செப்டம்பர் 29ம் திகதி அறிவித்தது. 2011ஆம் ஆண்டுக்குப் பின்னர் வீட்டுக் கடன் பெற்ற மில்லியன் கணக்கான குடும்பங்கள் எதிர்கொள்ளும் மிக உயர்ந்த வட்டி வீதம் இதுவாகும். இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
#sbsaudiopodcastWed, 30 Sep 2026 - 07min - 14623 - திலீபன் நினைவுச் சிலை அகற்றம்: வடக்கு – கிழக்கில் போராட்டங்கள்
யாழ்ப்பாணத்தில் திலீபன் நினைவு நாள் நிகழ்வின் போது அமைக்கப்பட்ட சிலை காவல்துறையினரால் அகற்றப்பட்ட நிலையில் மீண்டும் அதனை அமைக்க கோரி வடக்கு கிழக்கில் போராட்டங்கள் இடம்பெற்று வருவதோடு. தமிழ் தரப்பிலிருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
#sbsaudiopodcastWed, 30 Sep 2026 - 08min - 14622 - நாட்டின் வட்டி விகிதம் 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது
ஆஸ்திரேலியாவின் அதிகாரபூர்வ வட்டி வீதம் குறித்த தனது முடிவினை ரிசர்வ் வங்கி இன்று அறிவித்தது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
#sbsaudiopodcastTue, 29 Sep 2026 - 02min - 14621 - படகு மூலம் வந்த 30,000 பேருக்கு ஆஸ்திரேலிய அரசு நிரந்தர விசா வழங்கியுள்ளதாக தகவல்
2009 முதல் 2014ஆம் ஆண்டு வரை படகு வழியாக ஆஸ்திரேலியா வந்த 30,000-க்கும் அதிகமான புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு நிரந்தர விசாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
#sbsaudiopodcastTue, 29 Sep 2026 - 03min - 14620 - இன்றைய செய்திகள்: 29 செப்டம்பர் 2026 - செவ்வாய்க்கிழமைTue, 29 Sep 2026 - 04min
- 14619 - Who really runs Australia, and where you fit in - ஆஸ்திரேலியாவை உண்மையில் யார் நடத்துகிறார்கள், அதில் உங்கள் பங்கு என்ன?
Do you know who can help you with a business permit, a rental problem or family support? Through the stories of Fedele, Carol and Abeer, learn how Australia’s three levels of government work. Find out what local, state or territory, and federal governments are responsible for and where to turn for help. - தொழில் ஒன்றைத் தொடங்குவதற்கான வணிக அனுமதி, வாடகை பிரச்சனை அல்லது குடும்ப ஆதரவு என்பனவற்றுக்கு யார் உங்களுக்கு உதவ முடியும் என்று உங்களுக்குத் தெரியுமா? Fedel, Carol, மற்றும் அபீரின் கதைகள் மூலம், ஆஸ்திரேலியாவின் மூன்று நிலை அரசுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள். உள்ளூர், மாநிலம் அல்லது பிரதேசம் மற்றும் ஃபெடரல் அரசுகள் எதற்குப் பொறுப்பு மற்றும் உதவிக்கு எங்கு திரும்புவது என்பதைக் கண்டறியவும்.
How Australia Works is an SBS podcast that uses real stories and clear explanations to help you understand how government work in Australia, how laws are made and changed, and how you can have a say. Listen to the series and find shorter versions in 60 languages on the How Australia Works main page. - How Australia Works என்பது ஒரு SBS வலையொலி (podcast) ஆகும். இது உண்மையான கதைகள் மற்றும் தெளிவான விளக்கங்கள் மூலம், ஆஸ்திரேலியாவில் அரசு எவ்வாறு செயல்படுகிறது, சட்டங்கள் எவ்வாறு உருவாக்கப்பட்டு மாற்றப்படுகின்றன, மற்றும் இதில் நீங்கள் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது. இத்தொடரைக் கேளுங்கள்; அத்துடன் 'How Australia Works' முதன்மைப் பக்கத்தில் 60 மொழிகளில் இதன் சுருக்கமான வடிவங்களையும் காணலாம்.Tue, 29 Sep 2026 - 08min - 14618 - You are already inside the system | How Australia Works - முன்னோட்டம்: நீங்கள் ஏற்கனவே இந்த அமைப்பின் ஒரு பகுதி | ஆஸ்திரேலியா எவ்வாறு இயங்குகிறது?
How do Australia’s governments, laws and public services affect your everyday life? Through real stories, this introduction to the series shows you where to start when you need information and support, and how to question a decision. - ஆஸ்திரேலிய அரசு, சட்டங்கள் மற்றும் பொதுச் சேவைகள் உங்கள் அன்றாட வாழ்க்கையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன? உண்மையான கதைகள் மூலம், உங்களுக்குத் தகவல்களும் ஆதரவும் தேவைப்படும்போது எங்கு தொடங்க வேண்டும் என்பதையும், ஒரு முடிவை எவ்வாறு கேள்விக்குட்படுத்தலாம் என்பதையும் இத்தொடருக்கான அறிமுகப் பகுதி விளக்குகிறது.
How Australia Works is an SBS podcast that uses real stories and clear explanations to help you understand how government work in Australia, how laws are made and changed, and how you can have a say. Listen to the series and find shorter versions in 60 languages on the How Australia Works main page. - How Australia Works என்பது ஒரு SBS வலையொலி (podcast) ஆகும். இது உண்மையான கதைகள் மற்றும் தெளிவான விளக்கங்கள் மூலம், ஆஸ்திரேலியாவில் அரசு எவ்வாறு செயல்படுகிறது, சட்டங்கள் எவ்வாறு உருவாக்கப்பட்டு மாற்றப்படுகின்றன, மற்றும் இதில் நீங்கள் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது. இத்தொடரைக் கேளுங்கள்; அத்துடன் 'How Australia Works' முதன்மைப் பக்கத்தில் 60 மொழிகளில் இதன் சுருக்கமான வடிவங்களையும் காணலாம்.Tue, 29 Sep 2026 - 04min - 14617 - உங்களது வருமானவரியைத் தாக்கல் செய்துவிட்டீர்களா? காலக்கெடு நெருங்குகிறது!
2025–26 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய ஆஸ்திரேலியர்களுக்கு இன்னும் சுமார் ஒரு மாதமே உள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
#sbsaudiopodcastMon, 28 Sep 2026 - 03min - 14616 - சிட்னியில் நடைபெறும் பழைய மாணவிகளுக்கான வலைப்பந்தாட்டப் போட்டி
Chundikuli Girls' College Alumni Association NSW ஏற்பாட்டில் பல அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்தும் பெண்களுக்கான சிறப்பு வலைப்பந்தாட்ட நிகழ்வு, எதிர்வரும் அக்டோபர் 5ஆம் திகதி சிட்னியில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு தொடர்பான மேலதிக தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள் ஷிவானி தீரஜ் மற்றும் சிவாயினி அருள்குமரன் ஆகியோர். அவர்களோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
#sbsaudiopodcastMon, 28 Sep 2026 - 10min - 14615 - புற்றுநோய் மருந்துக்கு ஆஸ்திரேலிய அரசிடம் ஒப்புதல் கோரும் தமிழ்க் குடும்பம்
கணையப் புற்றுநோய்(pancreatic cancer)க்கான மருந்து, Daraxon Racib ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தப்படுவதற்கு விரைவாக ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி, நோயாளிகளும் நோயாளிகள் நலன் சார்ந்த அமைப்புகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சுகாதாரத் துறை அதிகாரிகளையும் சந்தித்துப் பேசியுள்ளனர். அமெரிக்காவின் FDA அமைப்பு இம்மருந்திற்கு இரண்டு மாதங்களுக்குள்ளேயே ஒப்புதல் அளித்தது, ஆனால் ஆஸ்திரேலியாவில், TGA அமைப்பு அதே நடவடிக்கையை மேற்கொள்ள ஓராண்டுக்கும் மேலான காலத்தை எடுத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முன்னெடுப்பில் ஈடுபட்டுள்ளவர்களில் ஒருவரான ஷங்கரி தனஞ்செயன், தனது சகோதரி அபிராமி தனஞ்செயனைச் சில ஆண்டுகளுக்கு முன்பு கணையப் புற்றுநோய்க்குப் பலி கொடுத்தவர். இவர்களது இந்த விழிப்புணர்வுப் பிரச்சாரம் குறித்தும் அதற்கான உந்துசக்தியாக இருந்த அபிராமி குறித்தும் ஷங்கரி மற்றும் அவரது தாயார் அமுதா தனஞ்செயன் ஆகியோருடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Mon, 28 Sep 2026 - 17min - 14614 - Medicare தளத்தை ஊடுருவிய AI. எங்கள் தரவுகளுக்கு என்ன பாதுகாப்பு?
ஒரு கணினி நிரலிடம் “இல்லை, இந்தத் தகவலை உங்களுக்குத் தர முடியாது” என்று சொல்லப்படுகிறது. அது அமைதியாகத் திரும்பிப் போகவில்லை. வேறு வழியைத் தேடியது, கண்டுபிடித்தது, உள்ளே நுழைந்தது. இது அறிவியல் புனைகதை அல்ல. இவ்வாண்டு ஜூன் மாதம், ஆஸ்திரேலியாவின் Medicare அமைப்புடன் தொடர்புடைய ஓர் அரசு இணையதளத்தில் நடந்த உண்மைச் சம்பவம். ChatGPT-ஐ உருவாக்கிய OpenAI நிறுவனத்தின் AI முகவர், அதாவது AI agent, இதைச் செய்திருக்கிறது. ஓர் அரசுக் கணினி அமைப்புக்குள் AI ஊடுருவியதாகப் பகிரங்கமாக அறியப்பட்ட முதல் சம்பவம் இதுதான். இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Mon, 28 Sep 2026 - 11min - 14613 - இன்றைய செய்திகள்: 28 செப்டம்பர் 2026 - திங்கட்கிழமைMon, 28 Sep 2026 - 03min
- 14612 - இந்தியா & தமிழ்நாடு: கடந்த 7 நாட்கள் செய்திகளின் தொகுப்பு
தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் 'ஜெம்' வீரமணி விவகாரம்; தமிழக இடைத்தேர்தல் - அனல் பறக்கும் பரப்புரைகள்; எல்நினோ தாக்கம் - தமிழகத்தில் கொளுத்தும் வெயில்; உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
#sbsaudiopodcastMon, 28 Sep 2026 - 09min - 14611 - Migrants are sending billions overseas each year. Are they hurting Australia's economy? - SBS Examines: குடிவந்தோர் தாய்நாட்டிற்குப் பணம் அனுப்புவதால் எமது பொருளாதாரம் பாதிக்கப்படுகிறதா?
Remittances have become a talking point in Australia's migration debate, with some saying they're draining our economy. But what's the real impact — both for the economy, and for migrants and their families? - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவிற்கு வருகை தந்து, மெல்பன் நகரின் மார்வெல் ஸ்டேடியத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான உள்ளூர் இந்திய வம்சாவளியினரைச் சந்தித்து உரையாற்றினார். அப்போது, குடியேற்ற எதிர்ப்பு குழுக்களும் போராட்டக்காரர்களும் தங்கள் குறிப்பிட்ட கவலைகளை வெளிப்படுத்த அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டனர். வெளிநாடுகளில் வசிக்கும் குடியேற்றவாசிகள் தங்கள் சொந்த நாடுகளில் உள்ள குடும்பத்தினருக்கு அனுப்பும் பணத்தை குறிக்கும் வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணம் - remittances அல்லது பணப் பரிமாற்றம் என்பது ஒரு சர்ச்சைக்குரிய தலைப்பாக மாறியுள்ளது. சிலரைப் பொறுத்தவரை, இது ஒரு கலாச்சார வழக்கம். மற்றவர்களுக்கோ, இது ஆஸ்திரேலியப் பொருளாதாரத்திற்கு ஒரு அச்சுறுத்தல். 'SBS Examines' தொடரின் இந்த நிகழ்ச்சியில், வெளிநாடுகளுக்கு உண்மையில் எவ்வளவு பணம் அனுப்பப்படுகிறது? மேலும் இது பொருளாதாரம், குடும்பங்கள் மற்றும் குடியேறிய சமூகங்கள் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்து Dennis Fang எழுதிய விவரணத்தைத் தமிழில் எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
#sbsaudiopodcast - #sbsaudiopodcastMon, 28 Sep 2026 - 09min - 14610 - இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (20 செப்டம்பர் – 26 செப்டம்பர் 2026)
ஆஸ்திரேலியாவின் இந்த வார (20 செப்டம்பர் – 26 செப்டம்பர் 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: குலசேகரம் சஞ்சயன்.
Sat, 26 Sep 2026 - 06min - 14609 - வீடு வாங்குவதற்காக ஆஸ்திரேலியர்கள் செய்யும் கடும் தியாகங்கள்
வீடு ஒன்றை சொந்தமாக்குவதற்காக தங்களது அன்றாடச் செலவுகளைக் குறைத்துக்கொள்ள ஆஸ்திரேலியர்கள் அதிக அளவில் தயாராக இருப்பதாக புதிய ஆய்வு தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
#sbsaudiopodcastFri, 25 Sep 2026 - 02min - 14608 - ஆஸ்திரேலியாவில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை உயர்வு
ஆஸ்திரேலியாவின் வேலைவாய்ப்பு சந்தையில் புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது; ஆகஸ்ட் மாதத்தில் வேலை இல்லாதோர் விகிதம் COVID-19க்குப் பின்னர் முதன்முறையாக 4.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. வேலைவாய்ப்பு எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், வேலை தேடுபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Fri, 25 Sep 2026 - 08min - 14607 - What are Indigenous Protected Areas in Australia? - ஆஸ்திரேலியாவில் உள்ள பூர்வீகக்குடி மக்கள் பாதுகாக்கும் பகுதிகள் என்றால் என்ன?
National parks, nature reserves, marine sanctuaries and Indigenous Protected Areas protect different environments and operate under different rules. What makes an Indigenous Protected Area different, and how can you find out whether you are welcome to visit? - ஆஸ்திரேலியாவின் பூர்வீகத் தாவரங்கள் மற்றும் வன விலங்குகளின் அழகை அனுபவிப்பதற்காக நீங்கள் ஒரு பயணத்தைத் திட்டமிடலாம். நீங்கள் திட்டமிடும் இடங்களுள், தேசியப் பூங்காக்கள், இயற்கை காப்பகங்கள், கடல் பூங்காக்கள் மற்றும் பூர்வீகக்குடியின மக்களின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளும் அவற்றில் அடங்கலாம். இந்த இடங்கள் வெவ்வேறு நோக்கங்களுக்காகக் கட்டமைக்கப்பட்டிருக்கலாம், அத்துடன் வெவ்வேறு விதிகளைக் கொண்டிருக்கலாம். சில பார்வையாளர்களை வரவேற்கின்றன, மற்றவற்றுக்கான அணுகல் கட்டுப்படுத்தப்பட்டிருக்கலாம். அப்படியானால், ஒரு பூர்வீகக்குடியினரின் பாதுகாக்கப்பட்ட பகுதியை எப்படி வேறுபடுத்துவது? அத்துடன் நீங்கள் அந்த இடத்தைப் பார்வையிட வரவேற்கப்படுகிறீர்களா என்பதை எப்படி அறிந்துகொள்வது? பாரம்பரியப் பாதுகாவலர்கள் இந்தப் பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் பராமரிப்பை எவ்வாறு வழிநடத்துகிறார்கள் என்பதையும், ஒரு நாட்டில் மரியாதைக்குரிய விருந்தினராக இருப்பதன் அர்த்தம் என்ன என்பதையும் ஆராயும் விவரணத்தை ஆங்கிலத்தில் எழுதியவர் Alyssa Chandler, அதைத் தமிழில் எடுத்து வருபவர், குலசேகரம் சஞ்சயன்.
Fri, 25 Sep 2026 - 08min - 14606 - இன்றைய செய்திகள்: 25 செப்டம்பர் 2026 - வெள்ளிக்கிழமைFri, 25 Sep 2026 - 04min
- 14605 - இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தீர்ப்பை அறிவித்தது நீதிமன்றம்; 22 வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் மக்கள் வாக்கெடுப்பு தேவையில்லையென உயிர் நீதிமன்றம் அறிவிப்பு இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Fri, 25 Sep 2026 - 10min - 14604 - Braces vs Clear aligners: சீரற்ற பற்களை சரிசெய்ய எது சிறந்தது?
சீரற்ற பற்களைச் சரிசெய்வதற்கு braces மற்றும் Invisalign போன்ற clear aligners-ஐ நாம் பயன்படுத்துவோம். இந்த இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன என்பது உட்பட பல முக்கிய விடயங்கள் பற்றி விளக்குகிறார் பிரிஸ்பேனில் பல ஆண்டுகள் பல் மருத்துவராக பணியாற்றும் ராஜி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Thu, 24 Sep 2026 - 10min - 14603 - NSW Hall of Champions இல் சேர்க்கப்பட்ட முதல் தமிழர்!
நாட்டின் மிகவும் அலங்கரிக்கப்பட்ட ஜிம்னாஸ்டிக் வீரர்களில் ஒருவரான பிரசாந்த் செல்லத்துரை அவர்கள் பெயர் NSW Hall of Champions இல் சேர்க்கப்பட்டுள்ளது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இவர், 2022ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு தடகள வீரர்களில் ஒருவர். ஆஸ்திரேலியாவில் இப்படியான ஒரு பெருமையைப் பெறும் முதல் தமிழர் என்ற பெருமையும் இவரை சாரும். பிரசாந்த் செல்லத்துரை அவர்களோடு 2022ஆம் ஆண்டு உரையாடியிருந்தவர் குலசேகரம் சஞ்சயன். இது ஒரு மறு ஒலிபரப்பு.
Thu, 24 Sep 2026 - 13min - 14602 - தேநீர்: ஒரு கோப்பையில் இத்தனை நன்மைகளா?
தேயிலையின் மருத்துவ குணம் மற்றும் ஆரோக்கியமான முறையில் எவ்வாறு தேநீர் தயாரிப்பது என்று பிரிஸ்பனில் வசிக்கும் சித்த மருத்துவர் டாக்டர் செல்வி மணி அவர்கள் வழங்கும் தகவல்களுடன் தேயிலையின் சிறப்பு குறித்த விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் செல்வி இன்பசேகரன்.
Tea: So many benefits in just one cup?Thu, 24 Sep 2026 - 12min - 14601 - ஆஸ்திரேலியாவின் தேவை அதிகக் குழந்தைகளா, அதிகக் குடியேற்றவாசிகளா?
ஒரு பெண் தன் வாழ்நாளில் சராசரியாக எத்தனை குழந்தைகளைப் பெறுகிறார் தெரியுமா? ஆஸ்திரேலியாவில் அந்த எண்ணிக்கை இப்போது ஒன்றரைக்கும் குறைவாகிவிட்டது. ஒரு சமூகம் தன் எண்ணிக்கையைத் தக்கவைக்க, அந்த சமூகத்திலுள்ள ஒவ்வொரு பெண்ணும் சராசரியாக 2.1 குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும். குறையும் பிறப்பு விகிதமும், அதிகரிக்கும் முதியோர் தொகையும் நம் நாட்டுக்கு ஓர் பெரும்பிரச்சனையாக மாறுகிறது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Thu, 24 Sep 2026 - 09min - 14600 - இன்றைய செய்திகள்: 24 செப்டம்பர் 2026 - வியாழக்கிழமைThu, 24 Sep 2026 - 04min
- 14599 - நேபாள அனர்த்தம்: உறவுகளுக்காகக் காத்திருக்கும் ஆஸ்திரேலியத் தமிழ்க் குடும்பங்கள்
நேபாள வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய தமிழ் குடும்பங்களுக்கு அரசின் மேலதிக ஆதரவை வலியுறுத்தி, தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக்கழகம் (TACA) இன்று புதன் கிழமை, சிட்னியில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியது. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கோரிக்கைகள் மற்றும் அவர்களின் அனுபவங்களைப் பதிவு செய்கிறது இந்த விவரணம். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.
Wed, 23 Sep 2026 - 12min - 14598 - எது நடந்தால் நாட்டில் வட்டிவீதம் குறையும்?
வீட்டுக்கடன் கட்டுபவர்கள் எல்லோரும் இப்போது ஒரே கேள்வியைத்தான் கேட்கிறார்கள்: வட்டிவீதம் எப்போது குறையும்? அதற்கு RBA (ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி) ஆளுநர் Michele Bullock இந்த வாரம் சொன்ன பதில் பலரை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Wed, 23 Sep 2026 - 03min - 14597 - ஐ.நா பாதுகாப்புச் சபையில் ஆஸ்திரேலியாவுக்கு இடம் கிடைக்குமா?
2029 முதல் 2030 வரையிலான காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிரந்தரமற்ற உறுப்பினர் பதவியைப் பெறுவதற்கான தனது பிரசாரத்தை ஆஸ்திரேலியா அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்
Wed, 23 Sep 2026 - 06min - 14596 - பிரசவத்திற்குப் பிறகான உடல் மற்றும் உளநலம்: பெண்கள் அறிந்துகொள்ள வேண்டியவை
குழந்தை பிறந்த பிறகு, ஒரு பெண்ணின் உடலில் ஏற்படும் முக்கியமான உடல் மற்றும் உளநல மாற்றங்கள் மற்றும் அதற்கு எப்போது மருத்துவரை அணுக வேண்டும்? என்பது போன்ற பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் சிட்னியில் மகப்பேறு மருத்துவராக கடமையாற்றும் டாக்டர் மீரா மணி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன்.
#sbsaudiopodcast
Your health and well-being after childbirth: Essential guidance for new mothersWed, 23 Sep 2026 - 14min - 14595 - இன்றைய செய்திகள்: 23 செப்டம்பர் 2026, புதன்கிழமைWed, 23 Sep 2026 - 03min
- 14594 - Plug-in Solar: வாடகை வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் சூரிய மின்சாரம்
வீட்டின் கூரையில் பெரிய solar system அமைக்க முடியாதவர்களுக்கும், வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கும் solar மின்சாரத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பு Plug in Solar System ஊடாக விரைவில் கிடைக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. Plug in Solar System என்றால் என்ன, இது எவ்வாறு மின்சாரத்தை உற்பத்திசெய்கிறது போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் மொஹமட் யூசுப் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Wed, 23 Sep 2026 - 12min - 14593 - சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனுக்கு மன்னிப்பை கோரும் மக்கள்
சவூதி அரேபியாவில் நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறையைச்சேர்ந்த சிவராஜா அனோஜனுக்குவிடுதலையையும் மன்னிப்பையும் கோரி பலஇடங்களில் கவனயீர்ப்பு போராட்டம்.அனோஜனின் விடுதலைக்கு தேவையானஅனைத்து நடவடிக்கைகளையும்முன்னெடுக்கின்றோம் அதிபர் அநுரகுமாரதிசாநாயக்க தெரிவிப்பு. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச்செய்தியாளர் மதிவாணன்
Wed, 23 Sep 2026 - 08min - 14592 - பாதுகாப்புக் குறைபாடு: ஆஸ்திரேலியாவில் 32,000 வாகனங்களைத் திரும்பப் பெறுகிறது BYD
BYD நிறுவனம் ஆஸ்திரேலியாவில் தனது முதல் பெரிய அளவிலான recall திரும்பப்பெறல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Tue, 22 Sep 2026 - 02min - 14591 - அக்டோபர் முதல் கிரெடிட் கார்டுகளில் முக்கிய மாற்றங்கள்
அக்டோபர் முதல் கிரெடிட் கார்டுகளில் முக்கிய மாற்றங்கள் வருகின்றநிலையில் வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டியது என்ன என்பது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Tue, 22 Sep 2026 - 03min - 14590 - AI கேமரா கண்காணிப்பு: ஒரு லட்சத்து 32 ஆயிரம் NSW வாகன ஓட்டிகளுக்கு அபராதம்
NSW-ல் கடந்த ஆண்டு 1 லட்சத்தி 32 ஆயிரம் பேருக்கு சீட்பெல்ட் தொடர்பிலான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Tue, 22 Sep 2026 - 02min - 14589 - இன்றைய செய்திகள்: 22 செப்டம்பர் 2026 - செவ்வாய்க்கிழமைTue, 22 Sep 2026 - 04min
- 14588 - 2026-க்கான உலகின் சிறந்த விமான சேவை எது தெரியுமா?
2026ம் ஆண்டுக்கான உலகின் மிகச்சிறந்த விமான சேவைகள் எவை என்ற புதிய பட்டியலை விமானதரப்படுத்தல் நிறுவனமான Skytrax வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Mon, 21 Sep 2026 - 02min - 14587 - மூன்று தசாப்தங்களாகப் Pauline Hanson நிலையான ஆதரவைத் தக்கவைத்துக் கொள்ள முடிந்தது எப்படி?
ஆஸ்திரேலியாவின் தீவிர வலதுசாரி மற்றும் குடியேற்ற எதிர்ப்பு அரசியல் கட்சியான Pauline Hanson’s One Nation கட்சி, வரலாற்று ரீதியாக பன்முகத்தன்மைக்கும் (Multiculturalism) குடியேற்றங்களுக்கும் எதிராக தீவிரக் கொள்கைகளைக் கொண்டு இயங்கி வருவது நாம் அறிந்தது. இந்தக் கட்சிக்கான ஆதரவும் அதற்கான எதிர்ப்புகளும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இந்தக் கட்சியின் தலைவர் Pauline Hanson அண்மையில் கூறிய சில கருத்துகள் மாபெரும் விவாதப் பொருளாகியுள்ளது. இது குறித்து, Centre for Public Christianity என்ற அமைப்பின் பேச்சாளரும், கட்டுரையாளரும் எழுத்தாளருமான பிரியன் Max ஜெகனாதன், மேற்கு ஆஸ்திரேலியாவில் பல சமூக அமைப்புகளில் மூத்த பொறுப்புகள் வகிப்பவரும், அரசியல்வாதியுமான யசோ பொன்னுத்துரை, மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் பணியாற்றுபவர், அரசியல் அவதானி என்று பன்முகம் கொண்ட பொன்ராஜ் தங்கமணி ஆகியோருடன் பரிமாற்றம் நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறார் குலசேகரம் சஞ்சயன். இரண்டு பாகங்களாகப் பதிவேறும் இந்நிகழ்ச்சியின் முதல் பாகம் இது.
Mon, 21 Sep 2026 - 15min - 14586 - Pauline Hanson கூறுவதுபோல், பன்முகப் பண்பாடு அளவுக்கு மீறிச் சென்றுவிட்டதா?
ஆஸ்திரேலியாவின் தீவிர வலதுசாரி மற்றும் குடியேற்ற எதிர்ப்பு அரசியல் கட்சியான Pauline Hanson’s One Nation கட்சி, வரலாற்று ரீதியாக பன்முகத்தன்மைக்கும் (Multiculturalism) குடியேற்றங்களுக்கும் எதிராக தீவிரக் கொள்கைகளைக் கொண்டு இயங்கி வருவது நாம் அறிந்தது. இந்தக் கட்சிக்கான ஆதரவும் அதற்கான எதிர்ப்புகளும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இந்தக் கட்சியின் தலைவர் Pauline Hanson அண்மையில் கூறிய சில கருத்துகள் மாபெரும் விவாதப் பொருளாகியுள்ளது. இது குறித்து, Centre for Public Christianity என்ற அமைப்பின் பேச்சாளரும், கட்டுரையாளரும் எழுத்தாளருமான பிரியன் Max ஜெகனாதன், மேற்கு ஆஸ்திரேலியாவில் பல சமூக அமைப்புகளில் மூத்த பொறுப்புகள் வகிப்பவரும், அரசியல்வாதியுமான யசோ பொன்னுத்துரை, மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் பணியாற்றுபவர், அரசியல் அவதானி என்று பன்முகம் கொண்ட பொன்ராஜ் தங்கமணி ஆகியோருடன் பரிமாற்றம் நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறார் குலசேகரம் சஞ்சயன். இரண்டு பாகங்களாகப் பதிவேறும் இந்நிகழ்ச்சியின் நிறைவுப் பாகம் இது.
Mon, 21 Sep 2026 - 15min - 14585 - SUV & Ute பயன்பாடு பெருகும் நிலையில் பாதசாரிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?
ஆஸ்திரேலியாவில் கடந்த சில ஆண்டுகளாக SUV-கள் மற்றும் பெரிய ute வகை வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், பாதசாரிகள் உயிரிழக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருவது கவனத்தை ஈர்த்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.
#sbsaudiopodcast
As SUV and Ute use increases, is pedestrian safety under threat?Mon, 21 Sep 2026 - 06min - 14584 - இன்றைய செய்திகள்: 21 செப்டம்பர் 2026 - திங்கட்கிழமைMon, 21 Sep 2026 - 04min
- 14583 - இந்தியா & தமிழ்நாடு: கடந்த 7 நாட்கள் செய்திகளின் தொகுப்பு
தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல் - ஒரே நாளில் 253 பேர் பாதிப்பு; பரபரக்கும் தமிழக இடைத்தேர்தல் களம்; தவெக அரசுடன் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மோதல் போக்கு; உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
India & Tamil Nadu: News highlights from the past 7 daysMon, 21 Sep 2026 - 09min - 14582 - இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (13 செப்டம்பர் – 19 செப்டம்பர் 2026)
ஆஸ்திரேலியாவின் இந்த வார (13 செப்டம்பர் – 19 செப்டம்பர் 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: குலசேகரம் சஞ்சயன்.
Sat, 19 Sep 2026 - 05min - 14581 - கணவனைக் கொன்று துண்டு துண்டுகளாக வெட்டி வீசிய சிட்னி பெண்ணுக்கு சிறை
தனது கணவரைக் கொன்று, அவரது உடலைத் துண்டு துண்டுகளாக வெட்டி வீசிய சிட்னி பெண்ணுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Fri, 18 Sep 2026 - 03min - 14580 - Why are migrant queer men facing barriers to sexual healthcare? - SBS Examines : பாலியல் ஆரோக்கியம்: பேசத் தயங்க வேண்டிய விடயமல்ல!
Medication that helps prevent HIV transmission is readily available in Australia, including for temporary visa holders and those without Medicare. So why are some LGBTQI+ migrants missing out? - பாலியல் ஆரோக்கியம் குறித்து பேசுவது பலருக்கும் சங்கடமானதாக இருக்கலாம். ஆனால், சரியான ஆதரவு கிடைத்தால், இந்த உரையாடல் மனம் திறந்து உரையாடும் வகையிலும், அனைவரையும் வரவேற்கும் வகையிலும் அமையலாம். Queer ஆண்களைப் பொறுத்தவரை, கலாசார ரீதியான அணுகுமுறைகளும் சமூக அவப்பெயர் குறித்த பயமும், உதவியை நாடுவதற்கு மேலும் ஒரு தடையாக இருக்கலாம். SBS Examinesஇற்காக SBS Thai ஒலிபரப்புடன் இணைந்து ஆங்கிலத்தில் Amy Teepawat தயாரித்த விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி இன்பசேகரன்.
#sbsaudiopodcast - #sbsaudiopodcastFri, 18 Sep 2026 - 09min - 14579 - Travelling safely in rural and remote Australia - ஆஸ்திரேலியாவின் கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் பாதுகாப்பாக பயணம் செய்வது எப்படி
Australia is a vast and diverse country to explore, but driving in rural and remote areas can involve conditions you may not encounter in cities. Knowing what to expect and how to prepare can help you travel more safely and confidently. - சுற்றிப் பார்ப்பதற்கு ஒரு பரந்த மற்றும் பன்முகத்தன்மை வாய்ந்த நாடு ஆஸ்திரேலியா. ஆனால், நகரங்களில் நீங்கள் சந்திக்காத சூழ்நிலைகளை, கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் வாகனம் ஓட்டும்போது எதிர்கொள்ள நேரிடலாம். அப்படி என்ன எதிர்பார்க்கலாம் மற்றும் எப்படித் தயாராக வேண்டும் என்பதை அறிந்துகொள்வது, மிகவும் பாதுகாப்பாகவும் நம்பிக்கையுடனும் நீங்கள் பயணிக்க உதவும். இது குறித்து, Phil Tucak ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Fri, 18 Sep 2026 - 09min - 14578 - அரசின் புதிய குடிவரவுக் கொள்கை முன்மொழிவுகள் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
அரசு முன்மொழிந்துள்ள புதிய குடிவரவுக் கொள்கை மாற்றங்கள், திறன்சார் குடியேற்றம், மாணவர் வீசாக்கள், குடும்ப ஒன்றிணைவு மற்றும் நிரந்தர வதிவிடம் பெறுவதற்கான வழிகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளன. ஆஸ்திரேலியாவுக்குக் குடிபெயர விரும்புவோர், இங்கு படிக்கும் மாணவர்கள், தமது குடும்பத்தினரை அழைத்துவர எண்ணுவோர் எனப் பலரையும் இவை நேரடியாகப் பாதிக்கவுள்ளன என்பதால், நமது தமிழ்ச் சமூகத்திற்கு இக்கொள்கை மாற்றங்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்தப் புதிய முன்மொழிவுகளில் என்னென்ன அடங்கியுள்ளன, அவை விண்ணப்பதாரர்களை எவ்வாறு பாதிக்கும் என்பதை பதிவுசெய்யப்பட்ட குடிவரவு முகவரும் (Registered Migration Agent), அடிலெய்ட் நகரில் இயங்கும் Migration Solutions நிறுவனத்தின் திறன்சார் குடியேற்றப் பிரிவின் மேலாளருமான சஷி செல்லத்துரை அவர்களுடன் அலசுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Fri, 18 Sep 2026 - 13min - 14577 - இன்றைய செய்திகள்: 18 செப்டம்பர் 2026 - வெள்ளிக்கிழமை
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 18/09/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.
Today's highlights (18 September 2026 - Friday)Fri, 18 Sep 2026 - 04min - 14576 - இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள்
மட்டக்களப்பில் கால்நடை மேய்ச்சல் நிலத்தை மீட்க 03 வருடங்களாக போராடும் கால்நடைப் பண்ணையாளர்கள்; இலங்கையில் தொடரும் துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் இதுவரையான காலப்பகுதியில் 37 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Fri, 18 Sep 2026 - 08min - 14575 - கையில் காசு(cash-in-hand) வேலைகள் தொடர்பில் ATO எச்சரிக்கை – நூற்றுக்கணக்கானோர் மீது வழக்கு
வரி தொடர்பான குற்றங்களுக்காக நூற்றுக்கணக்கான தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதுடன் மில்லியன் கணக்கான டாலர் அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Thu, 17 Sep 2026 - 02min - 14574 - ஆஸ்திரேலியாவின் குடியேற்றக் கொள்கையில் அதிரடி மாற்றங்கள் – புதிய விதிமுறைகள் அறிமுகம்
ஆஸ்திரேலிய அரசானது குடியேற்ற எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மாணவர் விசா, குடும்ப உறுப்பினர்களின் வருகை மற்றும் விசா விதிமீறல்கள் தொடர்பில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதேவேளை, நாட்டின் தொழிலாளர் தேவையை கருத்தில் கொண்டு கட்டுமானம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகளில் திறன் மிக்கவர்களுக்கு முன்னுரிமை வழங்கவும் புதிய நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Thu, 17 Sep 2026 - 09min - 14573 - கண் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வழிகள்
நமது கண்ணை சிறந்த முறையில் எப்படி பராமரிப்பது என்பது உட்பட கண் நலம் சார்ந்த சில கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மெல்பனைச் சேர்ந்த கண் மருத்துவ நிபுணர் ராஜ் பத்மராஜ் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Thu, 17 Sep 2026 - 11min - 14572 - யாழ்ப்பாண நண்பர்கள் உலகத்திற்கே உணவூட்ட வழி செய்கிறார்கள்
இந்தியா மற்றும் இலங்கை உட்பட உலகின் பல பகுதிகளிலும், விவசாயம் இன்றும் பாரம்பரிய வழி முறையைப் பின்பற்றித் தான் நடக்கிறது. புவி வெப்பமயமாகி வரும் போது, உலக மக்கள் அனைவருக்கும் எப்படி உணவு வழங்க முடியும் என்றும், வளங்களை எப்படி திறனுடன் பயன்படுத்த முடியும் என்றும் பலரும் சிந்திக்க ஆரம்பித்திருக்கும் வேளையில், சில தமிழ் இளைஞர்கள் தங்கள் சொந்த முயற்சியால் புதிய வழிகளை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். அவர்களில், மில்லர் அலெக்ஸாண்டர் ராஜேந்திரன் மற்றும் ஜெயெந்தன் ஆகிய இருவரை 2019ஆம் ஆண்டில் நேர்கண்டவர் குலசேகரம் சஞ்சயன். இது ஒரு மறு ஒலிபரப்பு.
Thu, 17 Sep 2026 - 12min - 14571 - அவமதிப்பு, அரை மன்னிப்பு: Pauline Hanson சர்ச்சை என்ன சொல்கிறது
“அவர்கள்தான் இப்பூமியிலேயே மிகவும் நாகரீக முதிர்ச்சியற்ற இனம் - the most primitive race on Earth - அவர்கள் எதையுமே சாதிக்கவில்லை" என்று, One Nation கட்சியின் தலைவர், செனட்டர் Pauline Hanson கூறியது மாபெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. அறுபத்தையாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் கண்டத்தில் வாழ்ந்து வரும் மனித குலத்தின் மூத்த சமூகங்களில் ஒன்றான பூர்வீகக்குடியின மக்களை அவர் இப்படி விவரித்தது நாட்டின் பல்வேறு பக்கங்களிலும் இருந்தும் பலத்த எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Thu, 17 Sep 2026 - 16min - 14570 - கல்யாணத்திற்கு பிறகும் காதல் தொடர வேண்டுமா?
காதலிப்பவர்கள் திருமண பந்தத்தில் இணைந்து கொள்வதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை மற்றும் திருமணத்திற்கு பின் உறவில் வரும் பிரச்சனைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து விளக்கமாக உரையாடுகிறார் 3R Counselling நிறுவனத்தில் Relationship Counsellor & Educator-ராக பணியாற்றி வரும் சிந்தியா நாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன்.
Keeping love alive after marriageThu, 17 Sep 2026 - 12min - 14569 - இன்றைய செய்திகள்: 17 செப்டம்பர் 2026 - வியாழக்கிழமைThu, 17 Sep 2026 - 04min
- 14568 - வசதியான ஓய்வு காலத்திற்கு ஆஸ்திரேலியர்கள் சேமிக்க வேண்டிய super தொகை எவ்வளவு?
ஆஸ்திரேலியர்கள் வசதியான ஓய்வுக்கால வாழ்க்கையை நடத்த, தங்களது superannuation நிதியில் முன்பைவிட சற்று அதிகமாக சேமித்து வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Wed, 16 Sep 2026 - 03min - 14567 - காது கேட்கும் திறன் குறைபாடு மறதி நோய் (Dementia) அபாயத்தை அதிகரிக்குமா?
காது கேட்கும் திறன் குறைபாடு, பார்வைக் குறைபாடு மற்றும் சமூகத் தனிமை ஆகியவை மறதி நோய் (Dementia) அபாயத்துடன் தொடர்புடையவை என்று ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. இது குறித்து விரிவாக விளக்குகிறார் முதியோர் நல மருத்துவர் டாக்டர் பூரணி முருகானந்தன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன்.
#sbsaudiopodcast
Does hearing impairment increase the risk of dementia?Wed, 16 Sep 2026 - 12min - 14566 - ‘தாயகம்’ என்றால் என்ன? – இக்கேள்வியை ஆராயும் ஆவணப்படம்
பூநாரைகள் (flamingos), அலையாத்திக் காடுகள் மற்றும் இலங்கையின் வடக்குப் பகுதி கடற்கரையின் கண்கவர் அழகிற்கு மத்தியில், சுற்றுச்சூழல் அழிவு, கடும் வெப்பம், குறைந்து வரும் கடல்வாழ் உயிரினங்கள், நில இழப்பு மற்றும் பெரிய அளவிலான வளர்ச்சித் திட்டங்களை எதிர்கொள்ளும் மீனவ, விவசாய மற்றும் கடலோரச் சமூகங்களின் வாழ்வியலைச் சித்தரிக்கும் ஆவணப்படம், ‘தாயகம்’ (Homeland). போருக்குப் பிந்தைய இடம்பெயர்வு, காற்றாலை மின் நிலையங்களின் கட்டுமானம் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவை தங்கள் வாழ்வாதாரம், கலாச்சாரம் மற்றும் நிலத்துடனான பூர்வீகத் தொடர்பு ஆகியவற்றை எவ்வாறு மாற்றியமைக்கின்றன என்பதை அப்பகுதி மக்கள் இதில் விவரிக்கின்றனர். சிட்னியில் திரையிடப்படவுள்ள ‘தாயகம்’ (Homeland) என்ற ஆவணப்படத்தின் இயக்குனர் அமித்தா அருட்பிரகாசம் அவர்களை நேர்காண்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
Wed, 16 Sep 2026 - 12min - 14565 - ஆஸ்திரேலியாவின் பணக்கார suburb-களில் வீட்டு விலை கடும் வீழ்ச்சி!
ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களில், அதிக விலை கொண்ட, அதாவது உயர் ரக வீடுகளின் விலைகள் வேகமாகக் குறைந்து வருகின்றன. இது தொடர்பில் செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Wed, 16 Sep 2026 - 06min - 14564 - இன்றைய செய்திகள்: 16 செப்டம்பர் 2026, புதன்கிழமைWed, 16 Sep 2026 - 03min
- 14563 - இலங்கை விவகாரம் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கலந்துரையாடல்
ஜெனிவாவில் இடம்பெற்று வரும் ஐ.நா மனிதஉரிமை பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Wed, 16 Sep 2026 - 08min - 14562 - மனித மூளையைப் பிரதிபலிக்கும் AI - ஆஸ்திரேலியத் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு
மனித மூளை இயங்குவதைப் போலவே சிந்தித்துச் செயல்படும் ஒரு செயற்கை நுண்ணறிவுத் தயாரிப்பை - ஒரு AI chipஐ - ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்று உருவாக்கியிருக்கிறது. சிட்னியைத் தளமாகக் கொண்ட ' BrainChip' நிறுவனத்தின் இந்தக் கண்டுபிடிப்பு தொழில்நுட்ப உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Tue, 15 Sep 2026 - 03min - 14561 - மெல்பனின் வடமேற்கில் உருவாகிறது புதிய Suburb!
மெல்பனின் வடமேற்கில் புதிய suburb ஒன்று உருவாகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Tue, 15 Sep 2026 - 02min - 14560 - ஆஸ்திரேலியாவின் 'கோடீஸ்வர' காளை - காரணம் என்ன?
ஒரு பரிசுக் காளை என்றால், பச்சைப் பசேலென்ற வயல்வெளியில், சுற்றிலும் பசுக்களுடன் நிற்கும் காட்சிதான் நம் மனதில் வரும். ஆனால், ஆஸ்திரேலியாவின் மிக விலையுயர்ந்த காளை, தன் சந்ததியை வேறு விதத்தில் பெருக்கப் போகிறது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Tue, 15 Sep 2026 - 03min - 14559 - இன்றைய செய்திகள்: 15 செப்டம்பர் 2026 - செவ்வாய்க்கிழமைTue, 15 Sep 2026 - 04min
- 14558 - வாழ்க்கைச் செலவு நெருக்கடியால் அதிகமான ஆஸ்திரேலியர்கள் செய்யும் குற்றம் எது தெரியுமா?
பெட்ரோல் திருட்டு ஆஸ்திரேலியர்களிடையே அதிகரித்துவருவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Mon, 14 Sep 2026 - 02min - 14557 - மறைந்த சாலமன் பாப்பையாவின் மனம் கவர்ந்த இலக்கியம்
தமிழ் உலகு நன்கறிந்த பேச்சாளர் சாலமன் பாப்பையா அவர்கள் கடந்த செப்டம்பர் 11ம் திகதி வெள்ளிக்கிழமை தனது 90வது வயதில் காலமானார். தனக்கு பிடித்த இலக்கியம் எது என்பது தொடர்பில் அவர் SBS தமிழ் ஒலிபரப்புக்கு வழங்கிய நேர்காணலின் மறு பதிவு இது. சாலமன் பாப்பையா அவர்களோடு உரையாடியவர்: றைசெல்.
Mon, 14 Sep 2026 - 11min - 14556 - வீட்டுக்கடன் பெறுவதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள்
வீட்டுக்கடன் பெறுவது தொடர்பில் எமக்கு எழக்கூடிய சில முக்கியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் Secure Lending Solutions என்ற நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் Mortgage Broker குமரன் மதுரை அவர்கள்.அவருடன் உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம்
Mon, 14 Sep 2026 - 10min - 14555 - ‘சதையைத் தின்னும்’ புண்: ஆஸ்திரேலியாவில் பரவும் Buruli ulcer குறித்து புதிய ஆய்வு
வெப்பமான காலநிலை தொடங்குவதையடுத்து, கொசுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், ஆஸ்திரேலியாவில் அரிதாகக் காணப்படும் ஒரு வகை தோல் நோய் குறித்து மருத்துவ மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.
‘Flesh-eating’ ulcer: New research into the spread of Buruli ulcer in AustraliaMon, 14 Sep 2026 - 08min - 14554 - இன்றைய செய்திகள்: 14 செப்டம்பர் 2026 - திங்கட்கிழமைMon, 14 Sep 2026 - 04min
- 14553 - The literary piece I like: Solomon Pappaiah - மறைந்த சாலமன் பாப்பையாவின் மனம் கவர்ந்த இலக்கியம்
Solomon Pappaiah is a popular orator in Tamil Nadu. He shares the literary piece he likes the most in Tamil literature. - தமிழ் உலகு நன்கறிந்த பேச்சாளர் சாலமன் பாப்பையா அவர்கள் கடந்த செப்டம்பர் 11ம் திகதி வெள்ளிக்கிழமை தனது 90வது வயதில் காலமானார். தனக்கு பிடித்த இலக்கியம் எது என்பது தொடர்பில் அவர் SBS தமிழ் ஒலிபரப்புக்கு வழங்கிய நேர்காணலின் மறு பதிவு இது. சாலமன் பாப்பையா அவர்களோடு உரையாடியவர்: றைசெல்.
Sun, 22 Apr 2018 - 11min - 14552 - இந்தியா & தமிழ்நாடு: கடந்த 7 நாட்கள் செய்திகளின் தொகுப்பு
முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணம்; திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சு! வலுக்கும் கண்டனங்கள்; தமிழக இடைத்தேர்தல் - பரபரக்கும் தமிழக அரசியல் களம்; உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
India & Tamil Nadu: News highlights from the past 7 daysMon, 14 Sep 2026 - 09min - 14551 - இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (06 செப்டம்பர் – 12 செப்டம்பர் 2026)
ஆஸ்திரேலியாவின் இந்த வார (06 செப்டம்பர் – 12 செப்டம்பர் 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: குலசேகரம் சஞ்சயன்.
Sat, 12 Sep 2026 - 05min - 14550 - கார் திருட்டு சம்பவங்களில் விக்டோரியா முதலிடம்
ஆஸ்திரேலியாவில் வீடு புகுந்து கொள்ளை மற்றும் கார் திருட்டு சம்பவங்களில் விக்டோரியா முதலிடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Fri, 11 Sep 2026 - 02min - 14549 - Prostate cancer in Australia: Testing, treatment and support - புரோஸ்டேட் புற்றுநோய்: ஆண்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
About one in five Australian men will be diagnosed with prostate cancer in their lifetime. Understanding the prostate, your risk and the options for testing can help with early detection and treatment. In this episode of Australia Explained, learn about prostate cancer, PSA testing, treatment and support. - ஆரம்ப கட்டங்களில் புரோஸ்டேட் புற்றுநோய் பெரும்பாலும் எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்துவதில்லை. எனவே, உங்களுக்கு இருக்கும் ஆபத்தைக் குறித்து அறிந்துகொள்வதும், எப்போது பரிசோதனை செய்வது பொருத்தமானது என்பதைத் தெரிந்துகொள்வதும், உங்கள் மருத்துவரிடம் ஆலோசிப்பதும் முக்கியம். புரோஸ்டேட் புற்றுநோயை எவ்வாறு கண்டறிவது, அது கண்டறியப்பட்டால் எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் இந்த விவரணத்தில் பார்க்கலாம். இதனை ஆங்கிலத்தில் தயாரித்தவர் Phil Tucak தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்
Fri, 11 Sep 2026 - 11min - 14548 - Sunscreen சர்ச்சை - SPF50 பாதுகாப்பில் கேள்விக்குறி
ஆஸ்திரேலியாவில் SPF50+ என விற்பனை செய்யப்பட்ட சில சன்ஸ்கிரீன்கள், எதிர்பார்த்த அளவிலான சூரியப் பாதுகாப்பை வழங்கவில்லை என்ற சர்ச்சை தீவிரமடைந்துள்ளது. 20 சன்ஸ்கிரீன் தயாரிப்புகள் சந்தையில் இருந்து மீளப்பெறப்பட்ட நிலையில், அவற்றின் உற்பத்தியாளர் Wild Child Laboratories மீது தற்போது நீதிமன்ற வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Fri, 11 Sep 2026 - 08min
Podcasts semelhantes a SBS Tamil - SBS தமிழ்
El Partidazo de COPE COPE
Herrera en COPE COPE
Dante Gebel Live Dante Gebel
Es la Mañana de Federico esRadio
La noche de Cuesta esRadio
La Trinchera de Llamas esRadio
Hondelatte Raconte Europe 1
Affaires sensibles France Inter
LEGEND Guillaume Pley
El colegio invisible OndaCero
La Rosa de los Vientos OndaCero
Les grands dossiers de l'Histoire par Franck Ferrand Radio Classique
Espacio en blanco Radio Nacional
Enquêtes criminelles RTL
Entrez dans l'Histoire RTL
Le grand récit RTL
Les Grosses Têtes RTL
L'Heure Du Crime RTL
Parlons-nous RTL
El Larguero SER Podcast
Nadie Sabe Nada SER Podcast
SER Historia SER Podcast
Todo Concostrina SER Podcast
Un Libro Una Hora SER Podcast
Outros Podcasts de Sociedade e Cultura
Conversations ABC Australia
Casefile True Crime Casefile Presents
The Diary Of A CEO with Steven Bartlett DOAC
Forensic Files HLN
Unravel ABC Australia
Ukraine: The Latest The Telegraph
Forbidden History Like A Shot Entertainment
Unexplained iHeartPodcasts
Stuff You Should Know iHeartPodcasts
Barangay Love Stories Barangay LS 97.1 Manila | GMA Network Inc.
Late Night Live — Full program podcast ABC Australia
Australia All Over ABC Australia
The Megyn Kelly Show SiriusXM
Life Uncut LiSTNR
Mamamia Out Loud Mamamia Podcasts
The Michael Berry Show KTRH (KTRH-AM)
Papa Dudut Stories Papa Dudut | TAGM Marketing Solutions Inc.
2 Worlds Collide Podcast Sam Bamford
Legends of the Old West Black Barrel Media
James O'Brien's Mystery Hour Global
Podcasts de SBS Arabic24
SBS Vietnamese - SBS Việt ngữ SBS
SBS Cantonese - SBS廣東話節目 SBS
SBS Japanese - SBSの日本語放送 SBS
SBS Lao - SBS ພາສາລາວ SBS
SBS Mandarin - SBS 普通话电台 SBS
SBS Nepali - एसबीएस नेपाली पोडकास्ट SBS
SBS Tigrinya - ኤስ.ቢ.ኤስ ትግርኛ SBS
SBS Hindi SBS
SBS Bulgarian - SBS на Български SBS
SBS Bangla - এসবিএস বাংলা SBS
SBS Malayalam - എസ് ബി എസ് മലയാളം പോഡ്കാസ്റ്റ് SBS
